உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

107

பறையறைந்து, "வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கிச் சுதந்திர நாட்டத்தை மூட்டிய வ.உ.சி. ‘கப்பற் கம்பெனி' ஒன்றை ஆரம்பித்தார்! அப்பொழுது தான் இலச்ச ரூபா தேடிவந்து, பழியோடு திரும்பியது.

எதிர்ப்பின் இடையே உலககெலாம் பரவி ஒரு கோலோச்சிய ஆங்கில ஆட்சியின் நேரடி எதிர்ப்பின் இடையே- தொடங்கப் பெற்றது 'சுதேசிக் கப்பல் சுதேசிக் கப்பல் இயக்கம்' கப்பல் வேண்டுமே?

பம்பாயிலே, ஒரு கப்பல் வாங்க ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. எல்லாம் ‘சூழ்ச்சிக்காரர்’களின்

ஏற்பாடுகளால்தான்! கப்பல் கிடைக்கவில்லையே என்று தளர்ந்துவிட்டாரா? மலையே புரண்டு வந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர் அல்லவா சிதம்பரனார்! ஊக்கமாகக் கிளம்பினார்.

கொழும்பிலே போய், கப்பல் ஒன்றை ஒப்பந்தம் செய்தார். வாடகைக்கு! அப்படியாவது கிடைத்ததே என்னும் மகிழ்ச்சியிலே, தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மிதக்க விட்டார் கப்பலை! அது வியாபாரக் கப்பலாகவா காட்சியளித்தது? - விடுதலைக் கப்பலாகக் காட்சியளித்தது. ஆனால் வாடகைக் கப்பல்தானே, சொந்தக் கப்பலாகி விடுமா?

66

66

மீண்டும் புறப்பட்டார். கப்பல் வாங்க பணம் திரட்ட மனைவி நிறை கருப்பமாக இருந்தார்; மகன் உலகநாதன் நோய்ப் படுக்கையிலே கிடந்து உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். ஒரு முறையாவது வந்துவிட்டுச் செல்லுங்கள் என்று நண்பர்கள் முறையிட்டுக் கடிதம் எழுதினர். 'இறைவன் பெரியவன்; அவன் காப்பாற்றுவான்; நான் கப்பலுடன் திரும்புவேன்; இல்லையேல் கடலில் விழுந்து சாவேன்" என்று கும்பிடு போட்டுக் கடிதம் எழுதிவிட்டு கருமமே கண்ணாக இருந்தார்.

66

வாராது வந்த மாமணி வ.உ.சி. என்று உணர்ந்த வர்கள் ஓடி ஓடி வந்து ஆயிர ஆயிரமாகக் குவித்தனர். மீண்டும் பம்பாய் சென்றார் வீரர் - அங்கொரு கப்பல்; பிரான்சிலே யிருந்து ஒரு கப்பல்; ஆக இரண்டு கப்பல்களுடன் தூத்துக்குடி வந்தடைந்தார்! கங்கையும் கடாரமும் கொண்டு வாழ்ந்த சோழன் இராசேந்திரனே புதுப் பிறப்புப் பிறந்து தூத்துக்குடித் துறைமுகம் வந்தடைந்தது போன்று நாட்டுப் பற்றுடையோர்