உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னை ன்

திருக்குறள் கதைகள்

-

111

அந்த மெய்யுரை ஒன்றாலே சிறைத் தண்டனை, பொருள் தண்டப என்னும் அளவில் நின்றது. காந்தியடிகள், பொய்யாமை போலும் புகழில்லை. அறமில்லை, இன்பமில்லை என்பதை தெளிந்து அறிந்தவர் அல்லவா!

ர்

1919-ஆம் ஆண்டில் ஆங்கில அரசை எதிர்த்து அறப்போர் தொடங்கத் திட்டமிட்டார் அடிகள். திட்டமிட்டபடியே நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. அறப் போராட்டம் என்றால் தங்கள் எதிர்ப்பினைக் காட்டுவது ஒன்றே வேண்டுவது அல்லாமல் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படுத்தும் வன்முறைகள் எவையும் கூடா! ஆனால் உணர்ச்சிக்கு ஆட்பட்ட போராட்டக்காரர்களில் சிலர் வன்முறைகளைக் கையாண்டனர். இதனை அறிந்தவுடன் வருந்தினார் அடிகள். “அறப்போருக்குரிய பக்குவம் அடையாத மக்களை அறப்போரில் இறங்குமாறு ஏவியது இமயமலை போல்வதான பெருந்தவறு; போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டார். போராட்டத்தை நிறுத்தி விடுமாறும் ஆணையிட்டார். தாம் செய்தது தவறு' என்று மன்னிப்புக் கேட்கும் உலகத் தலைவர்கள் எத்தனை பேர்?

பொய்யா நோன்பினை வாழ்நாளெல்லாம் போற்றி, ஒழுகினார்அடிகள். அதனால் புவியிலுள்ளோர் உள்ளத் தெல்லாம் புகழ் வடிவிலே சுடர்விட்டு விளங்குகின்றார்!

“உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெள்ளாம் உளன்.

99

ஒருவன் தன் மனச் சான்றுக்கு ஏற்ப, பொய்யின்றி வாழ்வானாயின் அவன் உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைபெற்றவன் ஆவான்.)