திருக்குறள் கதைகள்
119
டு
இமை கொட்டாமல் பார்த்து நின்றனர். சென்ற, சிறிது நேரத்துள் வீரன் திரும்பினான். 'வாளா' திரும்பினானா? - கையிலே மான் தசை இருந்தது. புலவர்கள் பசியினைப் போக்குவதற்காகக் காட்டிலே புகுந்து வேட்டை யாடினான். உடன் வந்த இளைஞர்களைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் தானே வேட்டையாடி, தன் கையாலே தீமூட்டி, ஊனைப் பக்குவமாக வாட்டி, நல்ல ஊனாகத் தேர்ந்து கையிலே எடுத்துக் கொண்டு வந்து புலவர்களுக்கு அளித்தான். அவன் இவ்வாறு காலத்தால் உதவுவான் என்பதை அறியாத புலவர்கள் களிப்பும் வியப்பும் ஒருங்கே யடைந்தனர். பசி மிகுதியால் அவசரம் அவசரமாக உண்டனர்; பசி போனது ஆனால் நீர் வேட்கை உண்டாயிற்று. "புலவர்களே, இங்கே வாருங்கள்” என்று அழைத்துப் போய் ஒரு நீரூற்றைக் காட்டினான். உவப்புடன் நீரருந்திக் களைப்பு நீங்கினர்.
-
புலவர்களின் தலைவர் பெயர் வன்பரணர். அவர் கூறினார்: “வீர! நன்றி. நீ காலத்தாற் செய்த இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்ய வல்லோம்? 'நீ யார்?' என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை; அதனை அறிவிக்கலாமா? எங்களுக்கு அதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.”
66
ஐயா, காட்டிலே இருக்கும் யான் தங்களுக்கு என்ன உதவியைச் செய்ய முடியும்? இந்த மாலையையும் கடகங் களையும் மறுக்காமல் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றான் வீரன். மாலை, கடகங்களைக் கழற்றி, புலவர்களிடம் தந்தான். வியப்புத் தாங்காத புலவர்கள் நாத் ‘தழுதழுக்க’ நன்றி கூறினர். அவன் பெயரை அறிந்து கொள்ளுவதற்குத் துடித்தனர்.
“அன்ப, உன்னைக் காணும் போது ஒரு வேந்தனாகவே தோன்றுகிறது. உன் நாடு யாது? உன் பேர் யாது?”
-
இது புலவர்களின் ஆவலுரை.
"புலவர் பெரும, இதோ வருகிறேன்; நீங்கள் செல்ல வேண்டுமல்லவா. நானும் செல்ல வேண்டும். என்னு L ன் வந்தவர்கள் தேடிக் கொண்டு வந்தாலும் வந்து விடுவார்கள். தாங்கள் இப்பாதை வழியே செல்லலாம்" என்று வழி காட்டிவிட்டு வீரன் விரைந்து காட்டுக்குள் சென்றான். அவனுடன் வந்த வீரர்களுள் எவரையாவது கண்டாலும் வீரன் பெயரைக் கேட்டறியலாமே என்று தேடினர். ஆனால் அவர்களைக் காணவில்லை. அவர்களுள் எவரும் புலவர்களைக்