உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

127

ஏங்கிக் கண்ணீர் வடித்தேன். என் படுக்கையின் ஒரு பகுதியே நனைந்திருந்ததைத் தாங்கள் அறியக்கூடாதவாறும் நடித்தேன்.

தாங்கள் மருந்து வாங்க என்ன செய்வது என்னும் ஏக்கத்திலே தங்கள் மனைவியார் முகத்தைப் பார்த்தீர்கள். அவர்களோ தங்களுக்குக் குறையாத ஏக்கத்திலே தங்களைப் பார்த்தார்கள். யான் அந்தக் கொடுமையைப் பார்க்க மாட்டாதவனாகப் புரண்டு படுத்துக்கொண்டேன். சிறிது நேரம் வீடு அமைதியாகக் கிடந்தது. அம்மையார், “செல்வி! செல்வி!” என்று அழைத்தார்கள். அந்த மழலைத் தேன்குடம் “கலீர்கலீர்” என்று ஒலிக்கும் கரும்புக் கால்களுடன் ஓடிவந்தது. “வாடா, செல்வி” என்று உச்சிமுகர்ந்து தூக்கி, மார்பிலே அணைத்துக் கொண்டு, “செல்வி, இந்தக் கொலுசில் அழுக்கு இருக்கிறது; போக்கித் தருகிறேன் என்று கழற்றினார்கள். அந்தோ! கண் கொண்டு பார்க்கப் பொறுக்கவில்லை. காதுகொண்டு கேட்கப் பொறுக்கவில்லை. திரும்பி ஒருச்சாய்த்துப் படுத்திருந்த நான் குப்புறப் படுத்துக்கொண்டு விம்மினேன். அழுக்குப் போக்கு வதற்காகவா செல்வி கொலுசை வாங்கினார்கள்?”

(கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது. இரண்டு மூன்று துளிகள் கடிதத்திற்குப் பொட்டு வைத்தன. ஆறுமுகம் மனைவி மங்கலம் அம்மாள் படிக்கப் பொறுக்காது சமையற்கட்டுக்குச் சென்றுவிட்டார். ஆறுமுகம் தொடர்ந்து படித்தார்.)

66

“நீங்கள் வீட்டில் இல்லை. அருமைச் செல்வி என் அருகில் துள்ளுநடையில் வந்தாள். அந்த மூன்று வயதுச் சிட்டுக்கு அவ்வயதுக்குரிய அறிவும் பண்புமா அமைந்து இருந்தன? "மாமா, காபிகுடி” என்று என் வாயருகே கொண்டு வந்து காபி வட்டையை நீட்டியது. "வேண்டாம் செல்வி, நீ குடி” என்று அதன் வாயருகே வட்டையைக் கொண்டு சென்றேன். "நுஙும்; மாட்டேன்; நீ குடி; நீ குடித்தால்தான் நான் குடிப்பேன்” என்று அடம் பிடித்தது. “செல்வி, இப்படிச் செய்யலாமா? எச்சில் காபியையா மாமாவுக்குக் குடிக்கக் கொடுப்பது? இதோ... இந்தக் காபியை மாமாவுக்குக் கொடு” என்று அன்புறக் கூறினார்கள் அன்னையார். ஆனால் செல்விக்கு அமைதி ஏற்படவில்லை. முகத்தில் கவலைக் கோடுகளே தோன்றின. தோல்வியால் ஏற்பட்ட நாணத்தையும் கூர்ந்து கவனித்தேன். என் அறிவீனத் திற்காக நான் வெட்கப்பட்டேன்.