உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் – 8 8

மணிக்காளைக்குத் திருமண ஏற்பாடும் இடை

டையே

நடந்து வந்தது. எப்படியும் சில பெரியவர்கள் பெண் பிள்ளை வீட்டுக்காகவோ, ஆண் பிள்ளை வீட்டுக்காகவோ முன் வந்து தூண்டுவார்கள் அல்லவா! அப்படித்தான் மணிக்காளைக்கும் ஏற்பாடு ஆயிற்று.

பெண் வீட்டார் பெருஞ் செல்வர் என்றும், நல்ல சுற்றஞ் சூழல் உடையவர் என்றும்,பெண்ணுடன் ஆணும் பெண்ணுமாகப் பலர் பிறந்து நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும், எல்லாருக்கும் கடைசிப் பிள்ளையே பெண் என்றும், அவளுக்குத் தாய்வழிச் சொத்து 20 ரூபாய்க்குத் தேறும் என்றும், தந்தையார் எத்தகைய குறைவும் இல்லாது சீர்வரிசை செய்வார் என்றும், மாப்பிள்ளையின் குணம், செல்வம், சீர் இவற்றைக் கேள்விப் பட்ட அளவிலே பெண் வீட்டார்க்குப் பிடித்திருக்கிறது என்றும், செய்திகள் பறந்தன. இங்கிருந்தும் அங்கிருந்தும் சில பெரியவர்கள் போய் வந்து கருத்துக்களைப் பரிமாறினர். மணமகன் வீட்டார் மணமகள் விட்டுக்குச் சென்று 'மணஉறுதி செய்வதற்காக ஒரு நாள் குறிக்கப் பெற்றது.

மணிக்காளை மணம் குறித்து மகிழ அவன் பெற்றோர் இல்லையாயினும், சுற்றத்தார்க்கும் நண்பர்க்கும் குறைவு ல்லை. நாளை எதிர்நோக்கி யிருந்தோம்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுப் புதுச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. நம் ஊரிலிருந்து அவ்வூருக்குப் போய் வந்த அனைவர் வாயும் மணிக்காளை திருமணம் பற்றியே பேசின. அங்கிருந்து இங்கு வந்தவர்களும் அதுபற்றியே பேசினர். இங்குள்ள சிறப்புப் பற்றியும், அங்குள்ள வாய்ப்புப் பற்றியும் பேசுவது பலருக்குப் பொழுது போக்கு ஆகிவிட்டது. சிலர் தனைப் பற்றிய செய்தியைச் சேகரம் செய்வதிலும் பிறருக்குக் கூறுவதிலும் பெருமகிழ்ச்சி கொண்டனர். பொதுவாக மக்கள் பேச்சிலே மணமகள் வீட்டாரின் பணச் சிறப்பே புலப்பட்டது. மணிக்காளை பற்றி, குணமே முதலிடம் பெற்றது. நான் மகிழ்ந்தேன். மணிக்காளை இன்னும் பழைய கைவண்டிக்காரன் நிலைமையிலேயே வாழ்கின்றானே என்று வாழ்த்தினேன்.

ஒரு நாள் ஒரு பெரியவர் மணமகள் வீட்டிலிருந்து வந்தார். நாங்கள் நினைத்துக் கொண்டோம் திருமணத்திற்கு உறுதி செய்வது பற்றிக் கலந்து பேச வந்துள்ளார் என்று. எனக்கு எவ்வளவோ வேலையிருந்துங்கூட அவையெல்லாம் பொருட்

ல்லை. நான் ஏதோ வேறு வேலை காரணமாகச் சந்திப்பது