உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

169

சாக்கடையில் தவறி விழுந்தான். என்னால் மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாயை விலக்கினேன். தாத்தாவின் மகன்தான் அவன் என்பதை அறிந்து வருந்தினேன். நாடி நரம்புகள் துடிக்கத் தள்ளாடித் தள்ளாடிச் சென்றான். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவனும் நிற்கவில்லை என்றான்.

66

“உன் மீது குத்துப் படவில்லை; நல்ல காலம்” என்றேன்.

66

"நான் எச்சரிக்கை தவறியிருந்தால் உன்னிடம் இதனைச் சொல்லுமாறு இருந்திருக்க மாட்டேன். வா!” என்று அழைத்துச் சென்றான். அவன் படுத்திருந்த அறைக்கே போனோம். இதோ பார்! என்று பஞ்சும் துணியும் கொண்டு செய்த துணிப் பொம்மையைத் தூக்கி என்முன் போட்டான். அதன் மார்புப் பகுதி இரண்டாகப் பிளந்து கிடந்தது. "ஐயோ, உன் மீது பட்டிருந்தால்” என்றேன்.

"மனத்திற்காவது அமைதியுண்டு! தலைமலை அவ்வாறு தான் ஆகவேண்டுமென்றால் அதைத் தடுக்க முடியுமா? இதை உனக்குமா நான் சொல்லியாக வேண்டும்” என்று என் வாய்க்குப் பூட்டுப் போட்டான்.

“சரி பிறகு என்ன ஆனான்” என்றேன்.

66

அவன், வீடு போய்ப் படுத்திருக்கிறான். காய்ச்சல் மிகுதியாகி யிருக்கிறது. குளிரும் வெதுப்பும் மாற்றி மாற்றி மாட்டியிருக்கின்றன. நான் வைத்தியரை அனுப்பி வைத்தேன். அவன் போக்கே மாறியிருக்கிறது என வைத்தியர் சொல்லுகிறார். அளவுக்கு மிஞ்சின அந்தப் பயம் அவன் மூளையைக் குழப்பி விட்டிருக்கிறது. உளறுகிறான், சிரிக்கிறான் என்கிறார். என்ன செய்வது? நானும் போய்ப் பார்க்க வேண்டும் என்றுதான் துடிக்கிறேன். ஆனால் கிழவியை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது. உண்மையாக என் தாயாக இருந்தால் என்ன காரணம் காண்டும் என்னை படி ஏங்க விடுவாளா?" என்று

சொன்னான்.

66

'அவள் என்னவோ உள்ளே வைத்திருக்கிறாள். அதைச் சொல்லி விட்டால் சரியாகிவிடும். உன்மீது அவளுக்கு வாஞ்சை இல்லை என்றா எண்ணுகிறாய். ஏன் அவள் சொல்வது போல நீயும் மானம் போவதாக எண்ணுகிறாயா?" என்றேன்.

66

இல்லை; இல்லை; இப்படி நினைத்து நினைத்து நம் முன்னோரும் நாமும் கெட்டது போதும்; இன்னும் அந்தப்