178
இளங்குமரனார் தமிழ்வளம் – 8 $
-
புலிக் குகையிலே புள்ளிமான் குடியிருந்தது போலக் குடியிருந்தாள் காத்தாயி. புலி, சிங்கங்களுக்குக் கூட, கழுகு, பருந்துகளுக்குக் கூட தன் பெட்டை குட்டி குஞ்சு என்ற ‘பாசம்' உண்டு. ஆனாலும் கூட மூக்கனைப் பொறுத்த அளவில் அது இல்லை என்றால் அந்த வாழ்வினை எப்படி யுரைப்பது? ஏதோ உயிரைப் போக்கிக் கொள்ளாமல் வாழ்ந்தாள். மணிமுத்தையும் பெற்றெடுத்தாள்.
மூக்கன் என்றோ ஒருநாள் அயலூர் ஒன்றிலே 'சேவற் சண்டை’நடப்பதைக் கண்டான். அது அவனை மிகவும் கவர்ந்து விட்டது. இரண்டு இரண்டு பேர்கள் எதிரெதிராக இருந்து, சேவல்களைப் போருக்கு அனுப்புவதும், அவற்றின் கால்களிலே கத்தியைக் கட்டிவிடுவதும், ஒவ்வொரு முறையும் ஏவி வெறியூட்டி விட்டுக் குத்துமாறு செய்வதும், தோற்று ஓடினால் கூட விடாது பிடித்து வைத்து மேலும் தாக்க விடுவதும், அது சிந்தக்கூடிய இரத்தத்தைக் காண்பதிலே களிப்புக் கொள்வதும், எதிரியின் சேவலை அடித்து வெற்றி கொள்வதிலே இன்பம் கொள்வதும் மூக்கனைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. இக் காரியத்தைத் தன் ஊரிலேயும் நடத்த வேண்டும் என்று எற்பாடு செய்தான். மூக்கன் நினைத்தால் அவன் ஊரில் நடத்த முடியாது போய்விடுமா? எத்தனை ‘மூக்கர்கள்’ முன் வரமாட்டார்கள்?
ஊர்ப்புறத்திருந்த ஆலந்தோப்பிலே சேவற் போர் நடந்தது. எவ்வளவோ நல்ல காரியங்களுக்கெல்லாம் பயன்பட்டு வந்த அந்த ஆலந்தோப்பு கோழிச் சண்டைக்கும் பயன்பட்டது. அது தொடங்கியபின் தோப்பின் களை கெட்டதும் அன்றி, ஊரின் களையும் கெட்டது. ஊரிலுள்ள மக்களின் மனங்களிலும் எத்தனை எத்தனையோ பகைமையும், வேற்றுமையும் பிணக்கும் ஏற்பட்டன. இவ்வளவையும் தலைமை நின்று யவன் மூக்கன்தான்.
நடத்தி
சேவற்போர் வெற்றி தராது என்றால் வலுச்சண்டை செய்தாவது வெற்றி தேடிவிடுவது அவன் வழக்கம். கைச் சண்டையோ, வாய்ச் சண்டையோ அதனைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை.
இப்படியே எவ்வளவு நாட்கள்தான் ‘காட்டு ராசா’வாக ஆட்சி செய்ய முடியும்? மூக்கனுக்கும் எதிரி முளைத்தான். கடுவன் என்பவன் அவன். கடுவன், மூக்கன் சேவலை அடிக்கக் கூடிய அளவுக்கு வித விதச் சேவல்களைக் கொண்டு வந்தான். இனி மூக்கன் என்ன செய்வது?