28. வாழ வைப்போரே வாழ்வோர்
கோபம் மிக்க தந்தை தன் மகனைத் தூக்கிக் கீழே போட்டு மிதிக்கிறான்; நையப் புடைக்கிறான்; கண்கள் சிவக்க, நெஞ்சம் கொதிக்க, நாடி துடிக்கத் திட்டுகிறான்; கண்டவர்கள் மைந்தன் நிலைமைக்காகப் பரிவு காட்டுகின்றனர்; தந்தையின் கொடுஞ் செயலுக்காக வருந்துகின்றனர்; வாய்விட்டுப் பேசித் திட்டு கின்றனர்; ஓடிப் போய்ப் பிடிக்கின்றனர்; நிறுத்துகின்றனர்! ஆனால் ஒரு காவல் நிலையத்துள் (போலீசு நிலையம்) இம்மாதிரி ஒரு செயல் நடந்தால் பொதுமக்கள் சென்று தடுக்க முனைவது இல்லை; முனைவதும் குற்றமாகி விடும்!
விட்டிலைச் சிறுவர்கள் பிடித்து, சிறகினைப் பிடுங்கி, வாலிலே நூல் கட்டி இழுத்து வதைப்பதைக் கண்டால் இரக்கமுடைய எவரும் “தம்பி இந்த விளையாட்டு வேண்டா மடா!" என்று சொல்லத் தவறார்; சிறுவனோடு விளையாடும் ஓர் இளைய ளைய சிறுவனும் கூடச் சிறிய அளவில் இரக்கம் படைத்திருப்பின் தடுப்பான்! ஆனால் ஒரு வேந்தன் ஒருவனைக் காரணம் இருந்தோ இல்லாமலோ அறியாமல் கூடச் செய்யலாம் அல்லவா! - கழுவேற்றுகிறான்; தூக்கில் போடுகிறான்; கைகால்களை வாங்குகிறான்; தலையை வெட்டுகிறான்; அங்கே போய் “அரசே! அமைச்சே! இச்செயல் இழிவுடையது; பழியுடையது; இத்தகு கொடுஞ் செயலை விடுக உரத்தோடு உரைக்க முன் வருவோர் அரியர்.
وو
ச்
என்று
பாஞ்சாலி சபதம் என்னும் காவிய நூலில் பாரதியார் 'புலம்புவார்’ மாந்தர் நிலைமையை நினைத்து!
மு
பாஞ்சாலியைத் துச்சாதனன் அரச அவைக்கு, இழுத்துச் செல்கிறான் தெருவழியே! வழி நெடுக மக்கள் திரள்கின்றனர். 'ஆ! என்ன கொடுமை! என்று வாயோடு வாயாக முணு முணுக்கின்றனர். வாய்விட்டு உரத்துப் பேசி, ஒன்று கூடி, கூந்தலைப் பிடித்து நீசன் இழுத்துச் செல்வதைத் தடுத்து, அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி, அவனைத் தரையோடு தரையாக மிதிக்க வலிமையற்ற இவர்கள் கதறி அழுதும்,