உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

66

8

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

‘ஆண்டுகள் சில கடந்தன. நான் கல்லூரியில் படித்தேன்; மருத்துவத் தொழில் தொடங்கினேன். நல்ல வருவாயும் வரத் தொடங்கியது நாகையாவை மன்றாடி அழைத்து, என்னுடன் வந்து இருக்குமாறு வேண்டினேன். உங்களுக்குத் துணையாக வேறு எவரும் இல்லையே பின் ஏன் வரத் தயங்கவேண்டும் என்று வற்புறுத்தினேன். அறவே வர மறுத்துவிட்டார் நாகையா.

ம்"

"நான் செய்த உதவிக்குப் பதில் உதவியா? உண்மையான தொண்டு பயனை ஒரு நாளும் எதிர்பார்க்காது. எதிர் பார்த்திருந்தால் உண்மையான தொண்டாகவும் இருக்க முடியாது. என்று மறுத்துவிட்டார். “என்ன செய்வது? அவர் முதுமைத் துயரையும், வயிற்றுப்பாட்டுக்காகப் படும் பாட்டையும் நினைத்து நெஞ்சம் வேகின்றது. எதுவும் செய்தற்கு முடியவில்லை” என்று உள்ளம் நைந்து கூறினார் டாக்டர்.

66

'தாத்தாவை நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். என்னோடு வருகிறாரா? இல்லையா? அதைப் பார்த்து விடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு, பதிலை எதிர்பாராது நடந்தான் நாகப்பன். இமைகொட்டாது நோக்கினார் அரசு; உள்ளுக்குள் மகிழ்ச்சியும் தோன்றியது. நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றம் பெரிதல்லவா!

உறங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்த நாகையா, "நாகப்பா, என்னடா! இந்நேரம் இங்கே! உன் அப்பா பாவம், உன்னை நையப் புடைத்துவிட்டார்.” என்று கன்னத்தைத் தம் கையால் தடவினார். அந்த அன்புக்கரங்கள் தடவியவுடனே கண்ணீர் பெருக்கெடுத்தது நாகப்பனுக்கு. விம்மி விம்மி அழுதான்.

66

‘தாத்தா! என்னை அடித்துவிட்ட கவலையிலே அப்பா எழுந்திருக்கவே இல்லை; சாப்பிடவும் மறுத்து விட்டார். நானும் படுத்துவிட்டேன். உங்களைப் பார்த்து அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றுதான் இங்கு வந்தேன்.

66

"தாத்தா, நான் அறிவில்லாதவன்; என்னை மன்னிக்க மாட்டீர்களா?” என்றான்.

66

“நாகப்பா” என்றார். நாகையாவின் நா தளதளத்தது.

“நீங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும்; மறுக்கவே கூடாது. நீங்கள் வராவிட்டால் நான் வீட்டுக்குப் போகப் போவதே இல்லை.” தலையைத் தாழப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் நாகப்பன்.