40
இளங்குமரனார் தமிழ்வளம் – 8 $
மாதவன் புதியவன் ஆனான்; புதிய உணர்ச்சி; புதிய முயற்சி; வராத கணக்குப் பாடத்தை வரப்படுத்துவேன் என்னும் உறுதிப்பாடு; இவை போதாதா முன்னேற்றத்திற்கு?
99
மாதவன் வீட்டில் இருந்துகொண்டே படிக்க எண்ணினான். உள்ளூரில் இருந்த ஆசிரியர் அழகுமுத்துவினிடம் சென்றான். தன் நிலைமையை எடுத்துக்கூறி மன்றாடினான். “மாதவா! இனிமேல் நீ படிக்கவா?” என்று அழகுமுத்து நகைத்தார். “இனி உனக்குப் படிப்பு வரவே வராது என மறுத்தார். மாதவன் விடவில்லை. “நீங்கள் ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிடுங்கள்; நான் அதனை மறுபடி செய்து காட்டாவிட்டாலோ, ஒப்பிக்கா விட்டாலோ, என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள். நான் பழைய மாதவன் இல்லை; மாட்டேன் என்று மறுத்து விடாமல் சொல்லித் தரவேண்டும்” என்று அழாக்குறையாய் மன்றாடினான்.
ஆசிரியர் அழகு முத்துவுக்கு மாதவன் படிப்பான் என்னும் நம்பிக்கை சிறிதும் இல்லை. இருந்தாலும் பெரியவர் வீட்டுப் பிள்ளை என்னும் ஒரே ஒரு காரணத்தால் வேண்டா வெறுப்புடன் ஏற்றுக்கொண்டார். முன்பு பள்ளிக்கு வரும்போது ஏடு தொடங்கி வைத்தவர் அவர்தானே! மாதவனை அறியமாட்டரா என்ன?
டு
வீடு வேலை இவற்றையெல்லாம் மறந்து படிப்பே அடைக்கலமானான் மாதவன். தன்னை முட்டாள் ஆக்கிய கணக்குப்பாடத்தில் பெரிதும் கருத்துச் செலுத்தினான். எறும்பு ஊரிக் கல்லும் தேயும் என்பது பழமொழியல்லவா? அவன் முயற்சிக்குப் பயன்இல்லாமல் போய்விடவில்லை. கணக்கு நன்றாக வந்தது. பற்று ஏற்பட்டுவிட்டால் பாடம் சுமை யாகுமா? ஐந்தாறு ஆண்டுகளிலே கற்கவேண்டிய பாடங்களை ஓராண்டிலே படித்து முடித்தான். மேலும் ஊக்கம் வலுத்தது.
பத்தம் வகுப்புத் தேர்வை வீட்டிலிருந்தே எழுத முடிவு கொண்டான். ஆசிரியரும் துணை நின்றார். அடுத்த ஆண்டிலேயே மாதவன் பத்தாம் வகுப்புத் தேர்வைச் சிறப்புடன் முடித்து விட்டான். “என்ன இருந்தாலும் பெரிய மனிதர் பிள்ளை யல்லவா! ஏதோ சிறுபிள்ளையில் இருந்த அறிவு அப்படியேயா இருக்கும்! மாதவன் கெட்டிக்காரப் பிள்ளைதான் என்று பேசிக்கொண்டனர். சிலர் “இனிக் கிராம அதிகாரி வேலைகூட எளிதில் கிடைத்துவிடும் என்றும் பேசிக்கொண்டனர்.
وو