உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

49

என்னிடம் ஈவு இரக்கத்தை ஒரு சிறிதும் எதிர்பார்க்க முடியாது. ஏதோ வொன்று நடந்துவிட்ட பின்பு அலறியழுது பயன் இல்லை. முன்னாகவே அறிவோடு நடந்துகொள்; போ!” பெரியசாமியின் கோபத்தில் அலுவலகத்தில் “கீச்சு

மூச்சு"க்கூட இல்லை” ஒரே அமைதியாக இருந்தது.

L

66

பெரியசாமி இவ்வளவு கோபப்படுவார் என்று பரமன் நினைத்ததே இல்லை. கொடிய தாக்குதல் மொழிகளைக் கேட் பரமன் தலையைத் தாழப்போட்டுக்கொண்டு நிமிர்ந்து பாராமலே நடந்தான். அவனுக்கு என்னென்னவோ போல் இருந்தது. எத்தனையோ சேவகர்கள் இடையே, எழுத்தர்கள் டையே, பொதுமக்கள் இடையே, இவ்வளவு மானக்கேடான உரையைக் கேட்குமாறு ஆகிவிட்டதே என்று எண்ணி எண்ணி நெஞ்சம் ஏங்கியது. ஒரு பெரிய பாறையே தலையில் மோதித் தாக்கியது; போல் இருந்தது. என்ன ஆனாலும்தான் என்ன? ஏங்கிக்கொண்டே சன்னல் அருகில் உட்கார்ந்து கயிற்றை இழுத்துவிட்டான். பங்கா நகர்ந்தது. அலுவலகத்தில் மெல் லென்று காற்று வீசியது; ஆனால் பரமன் உள்ளம் வெந்து கொட்டியது!

நான்கு நாட்கள் கடந்தன; பரமன் அலுவலகத்திற்கு வந்திருந்தான். பெரியசாமி வரவேண்டிய ய நேரம். அவன் வருகையை எதிர் நோக்கிக்கொண்டு வாயிலிலே காத்திருந்தான் பரமன். அதிகாரி வந்தார்; வாய் பொத்திக் கைகட்டி நின்று கடிதம் ஒன்றை அவரிடம் நீட்டினான் பரமன்! அவ்வளவுதான்!

-

"பரமன்! நீ சேவகன் வேலை பார்ப்பதாக எண்ணமா? கலெக்டர் வேலை பார்ப்பதாக எண்ணமா? விரும்பிய நேரங்களி லெல்லாம் விடுமுறை எடுத்துக்கொண்டு விருந்துக்கும் வேற்றூருக்கும் போய்வர முடியாது. ஒழுங்காக வேலை பார்க்க முடியுமானால் பார்! இல்லாவிடில் உனக்கும் தொல்லை யில்லை - எங்களுக்கும் அல்லல் இல்லை -வேலையை விட்டுவிடு! பொல்லாத வேலை பார்க்கிறான் வேலை; இதில் நினைத்த பொழுதெல்லாம் விடுமுறை! எவரைக் கேட்டு விடுமுறைத்தாள் எழுதிக்கொண்டு வந்தாய்? நேற்றே கேட்டிருக்கக்கூடாதோ? நீ வைத்த ஆள் யாரிருக்கிறார்கள்?...” இவ்வாறு வெடி கோபத்திலே பேசி விரைந்துகொண்டு போய்விட்டார். பாவம்! சேவகன் பரமன் அதிகாரியை என்ன செய்துவிட முடியும்?

புதிதாக மாற்றுதலாகி அவ்வூருக்கு வந்த அதிகாரிக்குப் பரமன் மேல் வெறுப்பு ஏற்படும்படி மற்றுமுள்ள சேவகர்கள்