திருக்குறள் கதைகள்
53
“திருடுவது தீது; பொய் பேசி, வஞ்சம் செய்து வாழ்வது தீது. ஆனால் உழைப்பது தவறா? இங்கு வேலைமுடிந்து வீடு போவதற்கே இரவு மணி எட்டு ஆகிவிடும். பத்து மணிக்கு ஒரு வேலைக்குப் போகவேண்டும். உட்கார்ந்திருக்கும் வேலையா? மேற்பார்வை வேலையா? செங்கல், கல், மண், சுண்ணாம்பு சுமக்கும் வேலை. கட்டடக் கூலி வேலை! இரவெல்லாம் வேலை செய்தால் சம்பளம் இரண்டு ரூபா. இரவு பகல் இன்றி வேலை பார்ப்பவனுக்கு உட்கார்ந்த இடத்திலே உறக்கம் வராதோ? அலுவலகத்திலே உறங்கக்கூடாது என்பதை உணர்கின்றேன். ஆனால் இயற்கை உணர்ச்சியைத் தடுப்பது எப்படி?
“எனக்கு எத்தனையோ சங்கடங்கள் ங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒப்பித்து உதவி எதிர்பார்த்து நான் வரவில்லை; நான் தவறு உடையவன்தானா? இந்தச் சேவகன் வேலைக்கும் தகுதியற்றவன்தானா? என்று என்னை நானே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டாமா?
பணம்
"விருந்துக்குப் போகவா விடுமுறை கேட்டேன்! அன்று விடுமுறை கிடைக்காததால் என்னுள்ளம் பட்டபாட்டை என்னவென்று சொல்வது? ஐயா, உங்கள் பையன் ‘மதி’யைப் “புத்தகம் இல்லாமல் வகுப்புக்கு வராதே” என்று சொல்லி அனுப்பிவிட்டார்களே. ஏழையான என் மகன் படிக்கப் புத்தகம் இல்லாமல் வகுப்பில் இருக்க விடுவார்களா? தங்கு விடுதிச் சம்பளம், சாப்பாட்டுச் சம்பளம், பள்ளிச் சம்பளம் இவ்வளவும் கட்டாமல் இருக்கவிடுவார்களா? முப்பத்தொன்றாம் தேதிக்குள் கட்ட ாவிட்டால் ல் வடிவேலு கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவான்" என்று கடிதம் வந்தது. அரசாங்க உதவிப்பணம் கிடைத்துவிடும் கிடைத்துவிடும் என்று நாள் தோறும், வேளைதோறும் எதிர்பார்த்து எதிர்பார்த்துச் செத்துக் கொண்டிருந்தேன். இந்நிலைமையிலேதான் இத்தனாம் நாள் சம்பளம் கட்டாவிட்டால் வெளியேற்றப்படுவான்' என்று கடிதம் வந்து சேர்ந்தது. எப்படி ஐயா, இதயம் வெடிக்காமல் இருக்கமுடியும்? நான் என்ன இரும்புப் பெட்டியில் பணம் வைத்து வைத்து, எண்ணி எண்ணி அடிக்கிக் கொண்டிருப்பவனா? எடுத்து உடனே அனுப்பி வைத்துவிட.
66
"உழைப்பினால் சிறிது சேர்த்து வைத்திருந்த பணத்தையும் முப்பத்தொன்றாம் தேதி கொண்டுபோய்ச் சேர்க்க விடாதவாறு செய்துவிட்டது தங்கள் கடமை உரை கட்டளைக்குப் பணிந்தேன். ஆனால் என் மகன் நிலைமை? உங்களுக்கு நான் ஏவல் செய்பவன்;