திருக்குறள் கதைகள்
63
திட்ட வேண்டும். நீ செய்த தவறுக்கு உன் அப்பா, அம்மாவைத் திட்டினால் நீ பொறுத்துக் கொள்வாயா? நான் உன்னை மிதிக்க வேண்டும் என்றா மிதித்தேன். நீ இதற்கு முன்பு என்னை எத்தனை முறை மிதித்திருப்பாய்? அதற்கெல்லாம் நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா?" என்றான் குழந்தை.
66
நான் செய்தது தவறு. அறிவில்லாமல் செய்து விட்டேன். நீ இன்று வகுப்பில் கவலைவயுடன் இருந்தது என்னை வாட்டி வதைத்தது. என்னை அடிக்க ஓங்கிய கையால் உன்னை அடித்துக் கொண்டு உட்கார்ந்ததை இப்பொழுது நினைத் தாலும் என்னால் பொறுக்க முடியவில்லை என்றான் பூவண்ணன்.
“பரவாயில்லை! நடந்தது நடந்துவிட்டது. ஆத்திரப்பட்டு விட்டால் அறிவு இல்லாமல் போய்விடுகின்றது. என்ன செய்வது? கவலைப்படாதே! என்று பூவண்ணனை அனுப்பிவிட்டுக் குழந்தை தனியே நடந்து சென்றான்.
பூவண்ணனைத் தேறுதல் கூறி அனுப்பி விட்டாலும், அவன் கூறிய சொற்களை மட்டும் குழந்தையால் மறக்க முடிய வில்லை. “பிச்சைக்காரன்” "குருட்டுப்பயல்” என்னும் சொற்கள் மாறி மாறி மனத்தில் தோன்றித் துன்புறுத்தின. என்ண னன்னவோ நினைத்துக் கொண்டு அவன் தந்தை நல்லையா இருந்த பாழ் மண்டபத்தை அடைந்தான் குழந்தை.
66
‘என்னடா! பேச்ச மூச்சு இல்லாமல் இருக்கிறாய்? பள்ளிக் கூடத்தில் ஏதாவது நடந்ததா?” என்று வழக்கத்திற்கு மாறானபடி அமைதியாக இருந்த குழந்தையைக் கேட்டான் நல்லையா.
குழந்தை தயங்கித் தயங்கிக் கூறினான். “அப்பா! பிச்சைத் தொழிலை விடமுடியுமா? முடியாதா?"
திடுமெனக் கேட்ட இக்கேள்வி நல்லையாவை அசைத்தது. திக்கு முக்காடச் செய்தது. “ஏனடா அப்படி? என்றும் இல்லாத படி இன்று என்ன வந்தது?” கேள்வி ஆத்திரத்துடன் அடுக்கினார் நல்லையா!
“காரணம் இருக்கிறது அல்லது இல்லை. நாம் பிச்சை எடுக்காமல் பிழைக்க முடியுமா? முடியாதா? அப்படி முடியவே முடியாது என்றால், இரண்டு பேருமே சேர்ந்து குளத்திலோ, கிணத்திலோ விழுந்து செத்துத் தொலைவோமே! மானமற்ற