உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. எண்ணமும் செயலும்

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்திலே மூடைகளும் பொருள்களும் குவிந்து கிடந்தன; காக்கும் அரண் எதுவும் இல்லை; பூட்டு இல்லை; தாழ்க்கோல் இல்லை; காவலர்களும் இலர்; ஆம்! எத்தகைய காவலும் வேண்டாத அளவில் காவிரிப் பூம்பட்டினம் இருந்தது ஏன்? அந்நகரில் திருட நினைப்பவரே இலர்; பிறகு திருட்டு நடக்க முடியுமா?

ஒருவன் ஒரு மூடையைக் களவு செய்தான் என்றால், அந்த நொடியிலேயே அவன் களவு செய்த மூடை அவன் கழுத்தில் ஏறிக் கொள்ளும். எவ்வளவு முயன்று எடுத்து எறிந்தாலும் அகலாது. அவன் விருப்பப்படி எங்கேனும் ஓடிவிடவும் முடியாது. ஊரைச் சுற்றிச் சுற்றி வரச்செய்து, ஊரார் அனைவருக்கும் 'இவன் திருடன்' என்பதைத் தெளிவாகக் காட்டி இழிவு செய்யும். எது? ஒரு பூதம்! வெள்ளிடை மன்றப் பூதம் என்பது அதன் பெயர், இந்தப் பூதத்தின் செயலை அறிந்தபின் எவர் மனத்திலேனும் கரவு எண்ணம், களவு வேட்கை இருக்க முடியுமா?

பிறரை வஞ்சித்துக் கவர்ந்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் ஒருவர் மனத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் ஒன்று அறநெஞ்சம் வேண்டும்; அல்லது அளவிடற்கரிய தண்டனை வேண்டும். இத்தண்டனை முறையை வலியுறுத்துகிறது காவிரிப்பூம்பட்டின வெள்ளிடை மன்றப் பூதம்.

பண்பாடு, பழக்க வழக்கம், கல்வி, குடும்பநிலை இவற்றைப் பொறுத்தே ஒருவன் உளநிலை அமைவதுண்டு. ஆகலின் அவனை நல்வழிக்குக் கொண்டு வர எண்ணினால் இவற்றுக்குத் தகுமான தண்டனை தருதல் வேண்டும். இக்கருத்துடைய பலப்பலர் பலப்பல வழிகளைக் காட்டியுளர்.

"இறைவன் எங்கும் நிறைந்தவன்; அவனுக்கு மறைத்து எந்தவொரு செயலையும் செய்துவிட முடியாது. எவருக்கும் தெரியாமல் இதைச் செய்து விடலாம் என்று எண்ணுவது பேதைமைத் தன்மை. இறைவன் உள்ளத்தும் உள்ளவன்; புறத்தும்

று