உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இன்பம் வேண்டுமா?

“குழந்தாய்! உனக்கு என்ன வேண்டும்?" என்று பெற்றோர்கள் கேட்கின்றனர்; பெரியவர்கள் கேட்கின்றனர். குழந்தை விரும்புபவற்றைக் கேட்கின்றது. அவ்வாறு கேட்பவற்றிலே குழந்தையின் தன்னலமும் புலப்படும்; பொது நலமும் புலப்படும்; குறுகிய உள்ளமும் புலப்படும்; விரிந்த உள்ளமும் புலப்படும். எப்படியானாலும் தனக்கு. விருப்பானவற்றையே குழந்தை கேட்கும். வெறுப்பானவற்றைக் கேட்காததுடன் கிடைத்தாலும் உதறியடிக்கும்.

விம்மி விம்மி யழுது, பாலைப் பெற்றுப் பருகும் குழந்தை, மருந்தைக் கண்டதும் முகம் வீங்க அழுவது ஏன்? குடிக்க வற்புறுத்தினால் என்ன ஓட்டம் ஓடுகின்றது; இழுத்துப் பிடித்தால் என்ன உதை உதைக்கிறது; அழுகிறது; தரையில் விழுந்து புரள்கிறது; பிடித்துப் புகட்டத் தொடங்கினாலும் வாயை இறுக மூடி, பல்லைக் கடித்து, படாதப்பாடு படுத்துகிறது! இவ்வளவும் ஏன்? விருப்பு வெறுப்பு என்னும் உணர்ச்சிகளின் விளைவேயாம்.

"தம்பி! பந்து விளையாடு' என்று கட்டளை இடும் பொழுது ஏற்படும் இன்பம், "தம்பி! பலசரக்கு வாங்கி வா என்று வேண்டும் பொழுது இருப்பது இல்லையே! ஏன்? விளையாட்டில் உள்ள விருப்பும் வேலையில் உள்ள வெறுப்பு மேயாம்.

குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களிடம் மட்டும்தான் இவ்விருப்பு வெறுப்பு உண்டா? இல்லை; வளர்ந் தவர்களிடமும் உண்டு; முதியவர்களிடமும் உண்டு. பருவத்திற்கு ஏற்றபடி வெவ்வேறு வழிகளில் விருப்பு வெறுப்பு ஏற்படும். சிறுவர் விருப்பு வெறுப்புகளுக்கும் பெரியர் விருப்பு வெறுப்பு களுக்கும் உள்ள வேற்றுமை இவ்வளவு தான்!

பெரியவர்கள், தம் வாழ்வை விரும்புகிறார்கள்; வறுமையை வெறுக்கிறார்கள்; நண்பர்களைக் காண விரும்புகிறார்கள்; பகைவர்களைப் பார்க்க வெறுக்கிறார்கள்; அன்பர்கள்