உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நோயெல்லாம் நோய் செய்தவருக்கே

மாடுகள் பெருஞ்செல்வம்! 'மாடு என்றால் செல்வம்' என்பது இலக்கியப் பொருள். மாடுகள் வளர்ப்பவருக்கும் பிறருக்கும் பயன்படுகின்றன; பால், தயிர், மோர், நெய் இவற்றுக்குக் குறைவு இல்லை. நிலத்திற்கு ஊட்டமாம் உரத்திற்குப் பஞ்சமில்லை. வேண்டியபொழுதில் விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். கன்றுகள் உழவுக்கும், கவலைக்கும், வண்டிக்கும் பயன்படும்.நன்றாக உழைத்து வைக்கோலைத் தின்றுகொண்டு, மணிகளைத் தன்னைப் பேணுபவருக்குத் தருகின்ற அளவு அதன் உபகார வாழ்வு அமைந்துள்ளது. இப்படியே ஆடு, பூனை, நாய், ஆய உயிர்களும் மக்களுக்கு நல்லுதவி புரிகின்றன. இவற்றை வளர்ப்பவர்கள் பலப்பல நலங்கள் எய்துகின்றனர். மாடு முதலான வீட்டு விலங்குகள் வளர்ப்பவர்களுக்கு நன்மை செய்கின்றனவே அன்றித் தீமை புரிவது இல்லை. நல்ல உயிர்களை வளர்க்கிறார்கள். அவையும் தம்மை வளர்ப்பவர்களுக்கு நன்மையே செய்கின்றன. நல்ல விதமாகவும் வாழ வைக்கின்றன.

இனிக், காட்டு விலங்குகளாம் சிங்கம், புலி, கரடி, இவற்றையும் பாம்பையும் பிடித்து ஒருவன் வளர்க்கிறான்; அவை விரும்பும் சுவைமிக்க உணவை வேளையறிந்து ஊட்டுகின்றான்; எவ்வளவு தான் உதவி செய்தும் என்ன? அவற்றின் தீய குணங்களை ஒழிக்க முடிகின்றதா? வளர்ப்பவன் எப்பொழுதும் அஞ்சி அஞ்சியே நெருங்க வேண்டும். எந்த வேளையிலும் அவன் தன் அழிவை எதிர்நோக்கிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு நொடியளவேனும் அமைதி கொள்ள முடிவது இல்லை. கொடும் விலங்கை அடக்கி ஒடுக்கும் திறம் என்னிடம் இருக்கிறது என்று சாட்டை, தடி, குத்துக்கோல், மின்சாரக்கம்பி இவற்றைக்கொண்டு செறுக்கி நெருங்குபவர்களும் அச்சமின்றிச் செல்ல முடிகிறதா? ஒரு நொடி வேளை அவன் சோர்ந்திருந்தால் அவன் குடி அழிந்தது; அவ்வளவே! இது போகட்டும். இக்கொடு விலங்குகளைப் பேணியவர், பால் கறந்துகொள்ள முடியுமா? வண்டியிலும் உழவிலும் இவற்றைப் பூட்டியடிக்க முடியுமா? துணை நின்றாவது உதவுமா? கட்டி வைத்துக் காக்கவாவது முடியுமா? அடுத்துச்