உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

சோலையின் வேலிப் புறமாகவோ வீழ வேண்டும்? இவை என்ன செய்தன? சுத்தோதனரை வெற்றி கொண்டன! ஊழைத் தடுத்து நிறுத்த உறுதிகொண்டு ஊக்கமுடன் நின்றார் சுத்தோதனர். ஊழ் அவரை வென்றுவிட்டது. இத்தகைய ஊழாற்றலை அறிந்தவர்கள் அதனை வகுத்து உரைக்க வேண்டுவது அவசியம் அல்லவா! அக் காரியத்தைத் தான் அருமையாகச் செய்தார் வள்ளுவப் பெருமகனார். 'ஊழ்' அதிகாரம் வகுத்துப் பத்துப் பாடல்கள் பாடினார்.

66

'ஊழ்கள் இரண்டுவகைப்படும்; ஒன்று ஆகூழ் (நல்லூழ்); மற்றொன்று போகூழ் (தீயூழ்); ஆகூழ் ஒருவற்கு உண்டாயின் முயற்சி மிகும். தீயுழ் உண்டாயின் சோம்பல் மிகும். ஆகூழ் உண்டாயின் அறிவு மிகும்; போகூழ் உண்டாயின் அறிவின்மை உண்டாகும். எவ்வளவு தான் முயன்று முயன்று காத்தாலும் போக வேண்டியது போயே தீரும்; எவ்வளவு, அள்ளி அள்ளி வெளியே கொட்டினாலும் போகாதவை போகவே போகா! கோடிக்கணக்கான செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும் ஊழால் அனுபவிக்கும் வகை இல்லாவிடின் எதையும் ஒருவன் அனுபவிக்க முடியாது. பொருள் இல்லாதவனுங் கூட ஊழ் உண்டாயின் எப்படியேனும் நன்றாக அனுபவிப்பான். ஊழ் மிக வலிமையானது; எவ்வளவு முயன்று தடுத்தாலும் அது வெற்றி கண்டுவிடும்" இக்கருத்துக்களை அழகுற அடுக்கி வைத்துள்ளனர்.