உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

திருவள்ளுவமாலை

205

சங்கச் சான்றோர்களும், சங்கம் சார்ந்த சான்றோர்களும், பிற்காலப் பெருமக்களும் திருக்குறளைப் பற்றி என்ன என்ன கருதியிருந்தனர் என நாம் அறிந்து கொள்வோம் ஆயின் நாம் பின்பற்றிச் செல்லத் துணையாக இருக்கும்.

சங்கச் சான்றோர்கள் பாடியனவாகக் கருதப் பெறும் பாடல்களின் தொகுப்பு ஒன்று ஐம்பத்தைந்து பாக்களுடன் உளது. 'திருவள்ளுவ மாலை' என்பது அதன் பெயர். அதனைப் பற்றி எழுந்துள்ள ஆராய்ச்சிகள் பலப்பல. 'சங்கப் புலவர்களே பாடினர்' என்பதும், சங்கப் புலவர்கள் பாடவில்லை, அவர்கள் பெயரால் எவரோ ஒருவர் பாடியுள்ளார் என்பதும், ஒருவர் அல்லர் பலர் பாடியுள்ளனர் என்பதும், ஆக இப்படிக் கருத்துக்கள்

உள்.

சங்கத்தவர் பாடினாலும் சரி, சங்கஞ் சார்ந்தவர் பாடினாலும் சரி, பிற்காலத்தவர் பாடினாலும் சரி. ஒருவர் பாடினாலும் சரி, பலர் பாடினாலும் சரி, வள்ளுவர் நூலுக்கும், வள்ளுவருக்கும் பெருமை தருவதற்கு அன்றி வேறு நோக்கில் அப் பாடல்கள் இயற்றப் பெறவில்லை! ஆதலால் ஆசிரியர் எவராயினும், அவர் கருத்து நற் கருத்து, அவர் மொழி நன்மொழி என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகலின் அவர்கள் பாக்களில் கண்ட பகுதியை ஒருவாறு தொகுத்துக் காண்போம்.

பொதுமறை

திருக்குறள் தமிழ்த் தண் சோலையில் முகிழ்த்த நறுமலர்; எனினும் அதன் உரிமை மணம் தமிழ்நாட்டின் அளவில் கட்டுப் பட்டது அன்று; தமிழர் அளவில் கட்டுப்பட்டது அன்று. உலகெல்லாம் விரிந்து நிற்கும் உரிமை உடையது; ஆம்! மன்பதைப் பொது நூல் அது. 'பொது மறை' என்னும் பெயர் உண்மை அதற்கு மிகத் தகும். உலகம் முழுமையும் திரண்டு கூடி உண்ணத் தக்க உயர் நூல் அது; உலகடைய உண்ணுமால் வண்டமிழ் முப்பால் மகிழ்ந்து" என்பது ஆலங்குடி வங்கனார் வாக்கு. அவரே காரணமும் காட்டுகிறார்.

66

“வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாது”

தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாத காரணத்தால் திருக் குறளை உலகு அடைய உண்ணுகிறது.