உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

37

என அலமரும் தாயுமானார் அன்பு உறையுளுக்கு அடைக்குந் தாழ் உண்டோ?

மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை

ஒருசிறி தெனினும்

சகித்திட மாட்டேன்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமுநான்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

என்று வெதும்பியழும் வடலூர் வள்ளலார் அன்புக்கு அடைக்குந் தாழ் உண்டோ?

"ஒன்று இல்லை என்று கேட்டு வருவானது முகத்தைக் காணப் பொறுக்காது என் மனம்” என ஏங்கும் வள்ளுவனார் அன்புக்கும் அடைக்குந்தாழ் உண்டோ?

இல்லை! இல்லை!

அடைக்குந் தாழ் இல்லையென எப்படி அறியலாம்?

துன்புறும் உயிரைக் கண்டு, உயிர்த் துடிப்பைக் கண்டு, உள்ளந் துண்ணென நடுங்க, உரை குழற, மெய்ம்மயிர் சிலிர்க்க, கண்ணீர் விடுவார் உளரே! அவரே அன்பர்! அவர் அன்புடைமைக்கு அடையாளங்களே இவைகள்! வெளிப்படையாக விளக்கும் சான்றே கண்ணீர்!

கண்ணீரே அன்பின் புலப்பாடு! கண்ணீரின் அகப்பாடே (உள் நிகழ்ச்சியே) அன்பு! இரண்டும் உருவும் நிழலும் போல்வன; மலரும் மணமும் போல்வன; மதியும் ஒளியும் போல்வன; தமிழும் இனிமையும் போல்வன!

"உலகம் நாடக மேடை; மக்கள் நடிகர்கள்;" என்பர். இந் நடிப்பு உலகத்திலே வாழும் நடிகர்களில் மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் நடிப்பார் இருப்பர் அல்லரோ! இருப்பர்; இருத்தல் இயல்பே! வஞ்சகன், தனக்கு எழுந்த சினத்தை அடக்கிக் காத்து, பொறுமையாளனாய் அன்பனாய் நண்பனாய் அருளாளனாய் அறவோனாய்க் காட்டித் திரிந்து காலம் வரும்போது நெஞ்சத்தில் தஞ்சமடைந்திருந்த வஞ்சகத்தை நிறைவேற்றிக் கொள்கின்றான் அன்றோ! செல்வன் ஏழையென நடித்து எத்துணை ஏமாற்றம் புரிகிறான். இப்படி 'அன்பும்’ நடிப்பாக இருக்கலாமல்லவா!