உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

71

பூனையைப் போற்றுகிறோம்-எலித் தொல்லை குறைந்து

நலமெய்துகிறோம்.

இவற்றை வளர்க்க

எத்தகைய பயனும் இல்லாத துடன், முட்டியும் கடித்தும் தொல்லையும் ஆக்கும் என்றால் வளர்ப்போமோ?

இவ்வாறே மன்பதை, ஒருவனைப் பயன் கருதிப் பேணு தலும், பயனில்லாக் காலையில் வெறுத்தலும் முறைதானே! தன்னைப் பேணிய மன்பதையைப் பேணாத ஒருவனை மன்பதை பேணிக் காக்குமானால் அதன் தலையில் வேறு யாரும் மண் அள்ளிப் போட வேண்டுமா? தனக்குத் தானே குழிதோண்டி வைத்து மண்ணைப் போட்டு மூடிக்கொண்டது ஆகும்!

தன்னைக் கெடுத்துக் கொள்வதே மன்பதைக்குச் செய்யும் நன்றி கொன்ற செயல் என்றால், தன் குடும்பத்தையும், பல குடும்பங்களை உள்ளடக்கிய குடியையும் ஒருங்கு கெடுப்பது எத்துணைத் தீமை!

உலகம் என்னும் ஓவியமகளை அழகுபடுத்தும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு! ஒவ்வொரு குடிக்கும் உண்டு. எல்லோரும் உலகமகள் ஓவியத்தை அழகுபடுத்தும் கடமை ஆற்றுவதில், ஓரொருவர் தவறினும் முழுமை அழகு நிரம்பாதே!

கையாகவும், காலாகவும் இருந்து அழகுறுத்தத் தக்கோர் கடமை தவிர்ந்தால் முடமும் நொண்டியுமாக அன்றோ காட்சி வழங்குவள்? கண்ணும் காதும் வாயுமாக இருந்து அழகு படுத்தத் தக்கோர் கடமை ஆற்றத் தவறின் குருடும், செவிடும், ஊமும் ஆகவன்றோ காட்சி வழங்குவள்? அந்தோ! அனைத்து அழகும் எய்தினாலும் ஓரொருவர் செயலால் உலகப் பேரணங்கு ஆரழகு இழந்து விடுவளே! இத்தகைய கேட்டிற்குக் காரணமாக இருப்பவர் யாராயினும் என்ன? அவர் குடிகேடர் அன்றி, உலகக் கேடரே!

காலில் கட்டி கிளம்பினாலும் துயர்தான்!

வயிற்றில் கோளாறு ஏற்படினும் துன்பந்தான்! பல்லில் வலி ஏற்படினும் படாப்பாடுதான்! கண்ணிலே புண்ணுற்றாலும் தாழா வலிதான்!

உலக மகள் உறுப்பில் எச்சிறு தாக்குதல் ஏற்படினும் துன்பந்தான்—கேடுதான்! அவள் நகமும் பல்லுங்கூடப் போற்றி யாக வேண்டிய பொருள்களே; புறக்கணிக்கத் தக்கவை அல்ல!