உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் – 9

“பொறையிற் சிறந்த கவசமில்லை”

இஃதோர் பாடல் வரி; நூற்சுருக்கம்!

கவசம் (மெய்ம்மறை) உடலுக்கும் உயிருக்கும் காப்பளிக்கும் கருவி! அதுபோன்றதே பொறுமை! பொறுமையின் சிறப்புப் புலப்படவில்லையா!

"ஒருவன் பலப்பல கீழ்ச் செயல்களைச் செய்கிறான்; என்றாலும் பொறுமை என்னும் ஒரே ஒரு போர்வையைப் போர்த்துக் கொள்வானாயின் அத்துணைக் கீழ்ச் செயல்களையும் மூடி மறைத்துக் கொண்டு விடுகிறான்; உடலில் ஏற்பட்டுள்ள