உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

85

இருக்க முடியுமா? தானும் கொடுக்காமல், பிறர் கொடுப்பதையும் பொறுக்காமல் தடுக்கும் ஒருவனை இந்நிலம் பொறுத்துக் கொண்டிருக்கும் காரணத்தால்தான் பொறுமைக்கு நிலம் டுத்துக்காட்டு ஆயிற்று போலும்!

கொடுப்பதை ஏன் தடுக்க வேண்டும்? இவன் கொடுத்துச் சிறப்பு அடைந்துவிடக் கூடாது; அவன் வாங்கி வாழ்ந்துவிடக் கூடாது-என்ன பெருந்தன்மை! அப்பப்பா! உலகம் இத்தகைய 'நல்லோர்களால்' தான் வாழ வேண்டும்.

பிறன் வாழ்வு கண்டு பொறாமைப் படுவதே தவறு; அதிலும் பிறன் கொடுக்கும் கொடையைப் பொறாமல் தடுத்து நிறுத்துவது மன்னிக்கத்தக்க தவறா? இத்தவறு செய்யும் 'பேதை' தான்மட்டும் கெடுவது இல்லை; தன் சுற்றத்தையும் சேரக் கெடுப்பான். தனக்கும் சுற்றத்திற்கும் உடுக்க வழியில்லாமல், உண்ண வழியில்லாமல் கெடுத்துத் தொலைப்பான்!

வள்ளுவர் போலும் அற நெஞ்சும், அருள் நெஞ்சும் கொண்டு உலக நலம் பேணியவர்கள் எவர்? அவரே எவ்வளவு கொதிப்படைந்து கூறுகிறார்.

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும்

உண்பதுவும் இன்றிக் கெடும்”

அழுக்காற்றின்—பொறாமையின்

காடுமையை விளக்க

வேறும் வேண்டுமா? வேண்டாம் என்றுதான் காவியக் கம்பன் கவி பாடுகின்றான்:

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே தடுப்பது நினக்கிது அழகோ! தகைவில் வெள்ளி! கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடு கின்றாய்.

முள்ளுடை வேல மரங்கள் செறிந்து வளைந்து நிற்கின்றன. நிழலோ குறைவு; முள்ளோ மிகுதி முள்வேல் காட்டின் உள்ளே செழிப்புற வளர்ந்த வாழையும், பலாவும் நிறைந்த சோலையுண்டு. ஆங்கே போய் நிழல்பெற, சுவைக்கனி பெற வெள்வேல் விடுமா? இவ்வெள்வேல் அன்னவர்களே உள்ளம் உவந்து கொடுக்கக் காத்திருக்கும் வள்ளியோர்களை முந்தி நின்று தடுக்கும்

புல்லியர்கள்—பொறாமையாளர்கள்!