பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 1 11 களுக்கு இடந்தராமற் சேமித்துப், பாதுகாக்கும் பொருள் களிலிருந்து இன்னதற்கு இவ்வளவு என்று பங்கிட்டுத் தட் பின்றிச் செலவு செய்ய ஏற்பாடுகள் வகுக்க வேண்டும் என விரும்பிய திருவள்ளுவர், "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு' எனக் கூறினர். அரசாட்சி செய்வோர் தல்ைகீழ் வேலைபார்க்கும் பெரிய அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும்பொழுது எச்சரிக்கை யாக இருக்கவேண்டுமென்று திருவள்ளுவர் வற்புறுத்தி யுள்ளார். ஒரு வேகலக்கு ஒருவர் மிக்க தகுதி வாய்ந்தவர் என்ற காரணத்தில்ை அல்லாமல், அவர் மெத்த வும் ஒருவர்க்கு வேண்டியவர் என்ற கார்ணத்தால் தேர்ந் தெடுக்கப்படின், அது காரணமாக ஏற்படும் விளைவுகள் பெர்ல் லாதனவாகும் எனக் கருதிய திருவள்ளுவர், "காதன்மை கந்தாஅறிவறியார்த்தேறுதல் பேதைமை எல்லாக் தரும்' என்ருர். பெரிய அலுவல் மேலாளராக உள்ளவர்கள் கூறும் யோசனைகளைக் கேட்டு ஆளவேண்டிய பொறுப்பு இக்கால ஆள்வோருக்கு உண்டு. அவர்கள் இடித்துச் சுட்டிக்காட்டி ல்ை, அதற்காக அவர்களை வெகுளாது அவர்கள் கூறுவன வ ற்றை ஆய்ந்து முடிவு செய்து அவர்களிடம் தோழமை காட்டுதல் வேண்டும்: திருவள்ளுவர் "இடிக்குங் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குங் தகைமையவர்' என்ற இடத்தில் அழகுபடக் கூறினர். அரசாட்சியில் இருப்போர் தயவு தாட் சணியம் இல்லாமல் எல்லோர்க்கும் ஒத்தவாறு கியாயம் வழங்கவேண்டுமென்பது திருவள்ளுவரால் எதிர்பார்க்கப் படுவது. யார் மாட்டுங்கண்ணேடாது இறைமைசெலுத்தப் பட வேண்டுமென்று அவர் கூறிய விடத்தில், தமராயின் நன்மை செய்து, பிறராயின் கோல்கோடுதல் ஒவ்வாது