பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இளங்கோவின் கடவுளோ மனிதரோ வந்து சோதித்து அழிவுரு மையால் சிறந்தவர்களென மதிக்கப்பட்ட நங்கையர் சிலர் பத்தினிய ரென ப் பேசப்படுவதுண்டு. கணவன் இறந்தவுடனே அல றிப் புடைத்து விழுந்து உயிர்விட்டமையினலே பத்தினியர் எனப் பெருமை பாராட்டப்படுபவர் சிலர் உண்டு. அவர் களின் வேருகக் கண்ணகியை இளங்கோவடிகள் கண்ட தால், கண்ணகியாரைப் பொருவறு பத்தினியார் என்று அவர் கூறியுள்ளார் என்பது தெரியவருகிறது. கண்ணகி யோ கணவன் சொல்லிய சொல்லுக்கு எதிர் மறுத் துப் பேசாமல் இருந்த தாற் பெருமையுடையவள என்று சொல் லுதல் இயலாது. அவளுடைய கற்பினைக் கடவுளோ மனி தைே சோதித்ததாகவும் செய்தியில்லே. கணவன் கோவ லன் கொல்லப்பட்டவுடன் தன்னுயிரைத் துறந்தவளாக வும் காணப்படவில்லை. இவ்வாறெல்லாம் இருந்தும் க்ண்ணகி பொருவறு பத்தினியாதல் எப்படி? கணவன் இறந்து பட்டவுடன் தானும் இறக்காமல், உயிரைக் கையிற் பிடித்துக் கொண்டு பாண்டிய மன்ன 'னிடம் வீறு தோன்ற வழக்குரைத்து வெளியேறிச் சேர நாடு சேர்ந்த கண்ணகியின் திறம் செங்குட்டுவனின் மனே வியால் போற்றப்பட்டுள்ளது. செங்கோல் கோடியதை உணர்ந்து பாண்டியன் தவறிழைத் தமையை ஒப்புக் கொண்டவுடனே உயிர்விட்டாகை,அவன் உயிரைத் தேடிச் சென்றவள் போல உடனே உயிர் விட்ட கோப்பெருந்தேவி பெரியவளா, முகக் கோட்டத்தோடும் மனக் கோபத்தோ டும் வந்த கண்ணகி நங்கை சிறந்தவளா என்று அறிவ தற்குச் செங்குட்டுவன் விழைந்த வேளே யில், அவன் . மனேவி தன் கணவனுடைய துன்பத்தைப் பொறுத் துக் கொள்ள மாட்டாது உடனே உயிர் விட்ட பாண் டிமாதேவி "வானகத்தில் பெருமையுறட்டும், கணவனுக்குத் தீங்கு இழைத்தோரிடத்தில் நியாயம் கேட்டுக் கடமையைச் செய்து முடித்து நம் நாட்டில் வந்து சேர்ந்த கண்ணகியை