பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அ.ச. ஞானசம்பந்தன் அடைந்தனர். தாங்கள் முன்னேறுவதுடன் தங்களைச் சேர்ந்த வர்களையும் முன்னேற்றும் பேராற்றல் வாய்ந்தவர்கள் இவ் விருபெரும் மகளிர் - கண்ணகியின் மாட்டு இறுதிக் காலத்தில் கழிவிரக்கம் கொண்டு பேரன்பு காட்டினான் கோவலன் என்பதில் ஐயமில்லை. ஆனால் கவுந்தியடிகளும் கொற்றவை வேடம் அணிந்த பெண்ணும் கண்ணகியை அறிந்திருந்த அளவுக்கு கோவலன் அறியவில்லை என்பது தெளிவு. ஆனால் பரமதத்தனைப் பொறுத்த மட்டில் நிலைமை வேறு விதம், கிடைத்த முதற் சந்தர்ப்பத்திலேயே வணிகனாகிய அவன் பிறரை எடைபோட நன்கு அறிந்திருந்தான். இரண்டாவது பழம் இறை யருளால் வந்தது என்பதை நம்ப மறுக்கிறான். பல்வேறு பண்டங் களையும் பலகாலமாக வாணிகம் செய்யும் அவன் ஈசன் அருள் என்ற பண்டத்தை இதுவரை கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. எனவே அதை நம்ப மறுத்து அதை நிரூபிக்க மற்றொரு பழத்தை வரவழைக்குமாறு அம்மையாருக்கு ஒரு தேர்வு நடத்து கிறான். பழம் வந்தது.அவன் ஐயம் தீர்வதற்குப்பதிலாக பேரச்சத் திற்கு ஆளாகிவிட்டான். இறைவன் திருவருளை இவ்வளவு எளிதாகப் பெறக்கூடிய பெருமாட்டியை மனைவி என்ற இடத்தில் வைத்து உரிமை கொண்டாடுவது தவறு என்று நினைத்து விட்டான். ஒரே விநாடியில் 'மானுடம் இவர்தாம் அல்லர்” என்ற முடிவிற்கு வந்துவிட்டான். - கூர்த்த மதியுடைய வணிகன் ஆதலால் இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு மனைவியின் அருமைப் பாட்டையும் உயர்வையும் அறிந்து கொள்கிறான். உணர்ச்சிவசப் படாமல் அறிவின் துணைகொண்டு ஆராய முற்பட்டதால் விளைந்த பயன் இதுவாகும். கோவலனைப் பொறுத்த மட்டில் கண்ணகியை அறிவுகொண்டு ஆராய முற்படவே இல்லை. தன் அறிவு முதலியவற்றை உணர்ச்சிக்கு அடகு வைத்து