பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அ.ச. ஞானசம்பந்தன் ஏதமில்லா'என்ற அடியும் நோதகவுண்டோ'என்ற அடியும் அடி எதுகை பெற்றுள்ளமை காணலாம். அடிசிலாக்குதற்கு'என்ற அடியும் நெடியாது’ என்ற அடியும் அடி எதுகை பெற்று வந்துள்ளமை காணலாம். இந்நிலையில் நோதக வுண்டோ' என்று தொடங்கும் அடி அதனையடுத்து மூன்றாவதாக நிற்கும் நாத்துரண்'என்ற அடியுடன் இணைந்து செல்வதைக் காணலாம். இடையேயுள்ள சாவக நோன்பிகள் அடிகளாதலின்' என்ற அடி முன்பின் எந்த அடியுடனும் பொருந்தாமல் தனியே நிற்றலைக் காணலாம். பொருள் முறையில் பார்த்தாலும் நோதகவுண்டோ நும்மகனார்க்கு என்று கூறிவிட்டு அடுத்து நாத்துரண் நங்கை யொடு நாள் வழிப்படுஉம் அடிசில் ஆக்குதற்கு என்ற சொற் றொடர் எவ்வித இடையீடும் இன்றி தொடர்ந்து செல்வதைக் கான முடியும். 'சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாத்து ணங்கையொடு நாள் வழிப் படுஉம்' (கொலைக்களக்காதை 18.19) என வருகிறது. சாவக நோன்பிகள் என்ற சொல் சமண சமயத்தில் இல்லறத்தை மேற்கொண்டவர்களுக்குரிய பெயர் என்பதை மறுக்கவில்லை. ஆகவே இந்தச் சொல்லை வைத்துக் கொண்டு ஒரு காப்பியத்தில் முன்னும் பின்னும் வரும் கருத்துக் களையெல்லாம் மீறிக் கோவலன் கண்ணகியைச் சமணர்கள் என்று கூறுவது பொருந்துமா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். சிலப்பதிகாரத்திலுள்ள அடிகளைப் படித்து வருவோமே யானால் அடி எதுகை வைத்தே இளங்கோவடிகள் பாடிக் கொண்டு வருகிறார். இரண்டு இரண்டு அடிகளுக்கு அடி யெதுகை என்று சொல்லப் பெறும். ‘மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி ஏத மில்லா விடந்தலைப் படுத்தினள் (கொலைக்களக்காதை 15, 16)