பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யில் இருப்பவர்க்குப் புரியாது. திருநெல்வேலிக்காரரின் கொச்சைம் பேச்சுக் கோவைக்காரருக்கு விளங்காது. எனவேதான், தமிழர்கள் அனைவருக்கும் புரியக் கூடியதாக ஒரு பொது வழக்கு இருக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. இந்தப் பொது வழக்குத் தான் செந்தமிழ்” ஆக விளங்குகிறது. நல்ல தமிழ், உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் எல்லோருக் கும் புரியக் கூடிய பொது வழக்காகத் தொன்று தொட்டு வழங்கி வரு கிறது. எனவேதான், எழுத்திலும் மேடைப் பேச்சிலும் நாம் நல்ல தமிழைப் பயன்படுத்தி வருகிருேம். பொது வாழ்வுக்கு வருகிறவர்கள் -பொது மக்களோடு தொடர்பு கொள்ளுகிறவர்கள்-பொது வழக் காகிய செந்தமிழைக் கையாள வேண்டியது பற்றி, இந்த விளக்கம் போதுமானதென்றே கருதுகிருேம். ஆனல் ஒரு சிலர் தாம் பொது வழக்காகிய செந்தமிழைக் கையாளுகின்ற தகுதி பெருத காரணத்தாலும்-அத் தகுதிக்குத் தம்மை உயர்த்திக் கொள்ளுகின்ற முயற்சியோ, திறமையோ இல்லாத காரணத்தாலும், தத்தம் கொச்சை மொழியிலேயே பேசியும் எழுதியும் வருகிருர்கள். தம்மிடம் உள்ள இக் குறைபாட்டின் ாரணமாக அவர்கள் எத்துணை சிறந்த கருத்துக்களை வழங்க முற் 'ட்டாலும், அவை பரவாமல் போகின்றன. எதிர்பார்த்த பலனை வை நல்குவதில்லை. இதை உணராமலே அவர்கள் தம் வாழ்நானே .lளுக்கிக் கொள்ளுவதோடு, தாம் கொண்ட குறிக்கோளே நிறை வற்றிக் கொள்ளாதவர்களாகவும்-பிறருக்குப் பயனற்றவர்களாகவும் ருக்கின்ருர்கள். கொச்சை மொழித் தீமையைப் போலவே, இன்னெரு தீமையும் நாட்டிலே பல ஆண்டுகளாகப் பரவி வருகிறது. அது பிறமொழி கலந்து பேசுவதாகும். இன்று பெருவாரியாக நாட்டிலே இருந்து வரும் இத்தீமை ஆங்கிலத்தை இடை யிடையே கலந்து பேசும் தீமை யாகும். இத்தீமை ஆங்கிலம் கற்றவர்களால் கையாளப்படும் தீமை யாகும. தாம் ஆங்கிலம் தெரிந்தவர் என்று காட்டிக் கொள்ளுவதற்காகம் புலர் இடையிடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுகிருர்கள். பல நேரங்களில் ஆங்கிலத் தொடர்களேயே கலந்து பேசுகிருர்கள். இரண்டு தனிப்பட்ட மனிதர்கள் பேசிக் கொள்ளும்போது எப்படிப் பசிக் கொண்டாலும் கவலேயில்லை. ஆல்ை, பொதுத் தொடர்பு பகாள்ளும்போது இச் செயல் பழிக்கத் தக்கதாகவும் பயனற்றதாகவும் ஆகிவிடுகிறது.