பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கதிரோன் மாலைச் சிவப்பேறிக் கொண்டிருந்தான் எங்கெங்கோ சென்ற பறவை யினமெல்லாம் கூடிப் பறந்தனவாம்; கூடுகள்ேத் தேடினவாம்; தேடிவந்தான் அவ்வேள்ை; தேன்மலரை யொத்தாளைக் - காணுமல் காத்திருந்தான்; கண்ணிரண்டும் பூத்திருந்தான்! வீகை நெஞ்சுக்கு வேலே கொடுத்திருந்தான்! பாணன் இசைபோற் பயிலும் மொழியுடையாள் காணக் கிடைக்காத கல்வயிரப் புன்னகையாள் தேடிவந்து காத்திருக்கும் சிற்பச் சிலேயனேயாள் ஓடிவந்து காத்திருக்கும் உள்ளத் துயிர&னயாள் பூங்கொடிபோல் மேனிப் புதுமை யழகுடையாள் தீங்கனிபோல் பேசித் தினமும் மயக்கிடுவாள் ஆசைக் குரிய அமுதவல்லி என்னுளத்துப் பூசைக் குரிய பொருளாவாள் என்றும் நிலேத்த வடிவாகி நெஞ்சில் இருப்பாள் மலேத்தேன் சுவையை வடிக்கும் இதழுடையாள் கன்னக் கதுப்பிலே கைவைத்தால் நெய்மணக்கும் மின்னும் விழிப்பார்வை மேலும் வெறிகூட்டும் தோளைப் பிடித்துவிட்டால் காதல் துடிப்பேறும் தாளே மலர்போலே தாங்கிப் பிடித்தாலும் நெஞ்சு களிகூரும்; நித்தம் மடிக்கிடந்து கொஞ்சும் கிளியெங்கே, கூடும் உயிரெங்கே இன்றேன் வரவில்லே? என்ன நடந்ததுவோ என்றேங்கி யேங்கி யிருந்தான் மன்னியன்! சந்தித்தார்; சிந்தை மறந்தார் பிணையதனைக் காணுமல் பேதலிக்கும் மான்போல் துணையைப் பிரிந்து துடிக்கும் புருப்போலே காத்துக் கவன்றிருக்கும் கட்டழகன் பின்வந்து பூத்த மலர்க்கண்ணப் பொன்னின் தளிர்போன்ற கைகளினல் மூடிக் களித்தாள் அமுதவல்லி. ஐயையோ வென்றே அலறி விடுவித்துப் பின்னல் திரும்பினன்; பேச்சுக்கு வேலையில்லே! தன்னெஞ்சை யூடுருவித் தாம்செல்லும் அம்பிரண்டு இராச்சியப்பன் 會弱