இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோற்றம்
தேனிலா ஊறுகின்ற சேல்விழிகள் யான்கண்டேன் வேனிலான் வில்போன்ற மென்புருவச் சீர்கண்டேன் புன்சிரிப்புப் புதுரோஜாப் பூத்திருக்கும் எழில்கண்டேன் கன்னக் குழிக்கவிதை கண்டு களிகொண்டேன் மதனன் குடியிருக்கும் மார்புகண்டேன் சென்றணைக்க அதிவிரைவிற் பாய்ந்தெழுந்தேன் அடடா நான் (கண் விழித்தேன்!
56