இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைவு அலைகள்
மீண்டு மோர்முறை சோதிடம் பார்ப்பதும்
விரைவில் பெண்ணுக்கு மன்றல் முடிப்பதும்
தூண்டில் போட்டுச் சிபார்சு பிடித்துமே
துரைத்தனப் பணி மகனுக்கு வாங்கலும்
மாண்டு போகுமுன் செய்திட வேலைகள்
வரையிலாதன கையி லிருப்பன
நீண்டிருக்கும் பொதுப் பணி செய்யவே
நேரமிங்கெனக் கேதுநீர் சொல்லுவீர்?
83