பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108 இளந்துறவி சுப்பிர : பொதுவாக நான் எங்கும் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதில்லைதான். ஆனல் தங்கவே கூடாது என்ற நியதி இல்லையே? ராம : நியதியோ என்னவோ எனக்கென்ன தெரியும்? ஒரு மாதத்திற்கு மேல் தங்கினுல் ஒரு சிலருடனுவது பழக்கம் ஏற்படும். அதுவே பற்றுக்குக் காரணம் ஆகும். அதுஉன்னுடைய துறவறத்திற்கு ஏற்றதல்ல என்று நீயே சொல்லுவாயே, அதனுல் கேட்டேன். அதிருக்கட்டும்...சற்று முன்புவந்திருந்தாளே அந்தப் பெண் யார்? சுப்பிர : யாரோ? எனக்குத் தெரியாது-நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. ஒரு நாள் இந்தப் பக்கம் என்னவோ பாடிக்கொண்டே வந்தாள். குரல் நன்முக இருந்தது. அவளுக்கு சன்மார்க்க மான பாட்டுக்கள் சில சொல்லிக் கொடுக்கலா மென்று நினைத்தேன். அதுமுதல் தினமும் வருகிருள்? பெயர் லக்ஷ்மி என்று சொன்னுள். ராம : நன்ருகப் பாடுகிருள். இத்தனைக்கும் சிறு பெண் தான். வயது பன்னிரண்டு இருக்குமா? சுப்பிர : இருக்கலாம். பார்த்தால் இன்னும் குழந்தை மாதிரி இருக்கிருள். ராம : உலகத்தையே வெறுத்துத் துறவு பூண்டவருக்குப் பாட்டெல்லாம் எதற்கு? சுப்பிர : அந்தப் பெண்ணுக்கு அழகான சாரீரம் இருக் கிறது. வெறும் சினிமாப் பாட்டுப் பாடிக்கொண் டிருப்பதைவிட இறைவன் மேலே நல்ல பாட்டுக்களே பாடட்டுமே என்றுதான் சொல்லிக் கொடுத்தேன்.