பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 45 வாசு : இது ஏமாற்று வித்தைக்குப் பேர்போன இடம் ஏண்டா சோமு, அப்படித்தானே? சோமு : வாசு, உன்னுடைய கேலியெல்லாம் இப்போ வேண்டாம். இந்த பங்களா சரோஜினிக்குச் சொந்தம். அது தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட் டாய். வாசு (திடுக்கிட்டு) ; இது உன்னுடையதல்லவா? சோமு என்னுடையதாகத்தான் இருந்தது. ந - ன் இதை சரோஜினிக்கு உரிமையாக்கி எழுதிக் கொடுத்து விட்டேன். வாசு ஏண்டா நீ சுயபுத்தியோடுதான் பேசுகிருயா? நீ சொல்லுவதெல்லாம் பயித்தியப் பேச்சாக இருக் கிறது. சோமு : இன்ஸ்பெக்டர் ஸார், நான் இதைப்பற்றியெல் லாம் இதற்கு முன்பு யாரிடமும் பேசியதில்லை. இப் பொழுதும் பேச விரும்பவில்லை. ஆனல் இந்த வாசு இருக்கிருனே, இவன்தான் என் வாயைப் பிடுங்கு கிருன். |பக்கத்திலுள்ள பெரிய அறையிலிருந்து டெலிபோன் மணி அடிக்கும் சத்தம் கேட்கிறது : யார் இந்தச் சமயத்திலே டெலிபோனில் கூப்பிடுவது ? இன்ஸ்பெக்டர் ஸார் நீங்கள் வாசு வோடு பேசிக்கொண்டிருங்கள். நான் ஒரு நொடியில் வந்துவிடுகிறேன். (அவசரமாகப் பக்கத்து அறைக்குப் போகிருன்.)