பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 55 லுள்ள என் பணத்தையெல்லாம் உங்களுக்குச் செக் எழுதிக் கொடுத்துவிட்டேன். இந்தப் பங்களாவும் உங்களுடையதுதான். இனி வேறென்ன வேண்டும்? பணம் இருக்கிறது ; நல்ல மாளிகை இருக்கிறது. உங்களுக்குச் சேவை செய்ய என்றும் நான் காத் திருக்கிறேன். ராகவன் : சரி, உன்னை நான் கட்டி வைக்கவில்லை-நீ சோமசுந்தரத்தின்மேல் எவ்விதப் பழியும் சுமத்த வேண்டாம். நான் கேட்ட அந்தக் கடிதத்தை மட்டும் எழுதிக் கொடு. சரோஜினி : அந்தக் கடிதமும் அவசியமில்லையே, ராகவ் ? ராகவன் (கண்டிப்பாக) . இல்லை, அது எனக்கு அவசியம் வேண்டும். சரோஜினி : அவர்மேல் குற்றம் சுமத்த நினைத்தால்தான் அந்தக் கடிதம் வேண்டும். இல்லாவிட்டால் அது எதற்கு ? ராகவன் . சரோஜினி, இப்படியெல்லாம் நீ கேட்கக் கூடாது. நான் சொன்ன இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை உன் விருப்பப்படி விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நிபந்தனையை மட்டும் என் விருப்பப்படி நீ செய்யவேண்டும். சரோஜினி : இந்த நிபந்தனையை நான் நிறைவேற்றி விட்டால் மற்ருெரு நிபந்தனையையும் நீங்களே நிறைவேற்றிக் கொள்ள முடியும். ராகவன் (சற்று திகைத்து) ; நீ சொல்லுவது எனக்கு விளங்கவில்லையே ?