பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


70 காதல் எங்கே ! சதாசிவம் : சுத்தப் பயித்தியம் மாதிரி இருக்கவில்லையா? நம்ம நாட்டிலே பூங்காவனத்திலே இப்படித்தான் காதலிகளெல்லாம் ஆடிக்கொண்டு திரிகிருர்களா? அந்தக் காதலனைத்தான் பார்-என்னமோ வெறி பிடித்தவன்போலப் பின்னலேயே ஒடுகிருன்- நிற் கிருன்-பிறகு அவனும் ஆட ஆரம்பித்துவிட்டான். ஒடுவதும் அவளைக் கட்டிப் பிடிப்பதுபோலத் தாவு வதும்-அவள் ஒடுவதும்-கிட்டே நெருங்குவதும். (உரக்கச் சிரிக்கிரு.ர்கள், ! லலிதா : நீங்கள் காதல் பண்ணிப் பார்த்திருந்தால் இதெல்லாம் புதுமையாகத் தோனது. சதாசிவம் : நானு? நல்லவேளை-இப்படிப் பயித்தியம் எனக்குப் பிடிக்காமல் தப்பித்தேன். ஆளுல் நம்ம சமூகத்திலே எங்கேயாவது இப்படி நடப்பதாக எனக்குத் தோன்றவில்லை. லலிதா நடக்காவிட்டாலென்ன? இப்படிக் கா த ல் பண்ணிக்கலியாணம் செய்துகொள்ள வேணுமென்று தான் கற்பனை செய்கிருர்கள். சதாசிவம் : பானுமதி நீ சொல்லு. இப்படிக் காதல் பண்ணுவதெல்லாம் உனக்குச் சம்மதமா? அவள் பூவைப் பிடிக்கிறதும்-பாடுறதும்-மார்பை நிமிர்த் திக் காட்டுவதும்-இரண்டு பேரும் முகத்தை ஆயிரம் கோணல் செய்வதும்-நம்ம பூங்காவிலே இப்படி நடந்தால் சுற்றிலும் ஒரு கூட்டமே கூடி வேடிக்கை பார்க்கமாட்டார்களா? கல்லடிகட விழா ம ல் போகாது. லலிதா : நீங்கள் இப்படி மற்றவர்களிடம் பேசிவிடா தீர்கள். பிறகு உங்களுக்குத்தான் கல்லடி விழும்.