பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி காட்சி ஒன்று (சென்னைப் பட்டினத்திலே ஒரு நாகரிகமான மாளிகை. அதிலே கலைச்சுவை தோன்ற அணி செய்யப்பட்ட விசாலமான அறை. மாலதி தன் கணவன் வாசுதேவனுடைய வருகையை எதிர்பார்த்து நிற்கிருள். மாலே நேரம். மாலதிக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். ஆனல் அவள் பார்ப்பதற்கு இருபது வயதைக் கடக்காதவள் போலவே தோன்றுகிருள். வெளியே கார் வந்து நிற்கும் அரவம் கேட் கிறது. மாலதி ஆவலோடு முன்னுல் அடி யெடுத்து வைக்கிருள். வாசுதேவன் உள்ளே நுழைகிருன். அவ னு க் கு முப்பத்திரண்டு வயதாகிறது. மேல்நாட்டு முறையில் உடை யணிந்திருக்கிருன். உள்ளே து ைழ ந் து கொண்டே அவன் பேசுகிருன்.) வாசு மாலதி, நீ தயாராக இரு. சோமு இங்கே ஆறு மணிக்குச் சரியாக வருவான். மாலதி சரி, உங்கள் நண்பர் வருகிருரா ? அப்போ நாம் வெளியிலே புறப்பட்டமாதிரிதான். வாசு ஏன் அப்படிச் சொல்லுகிருய் ?