பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


கூறினார். "அய்யய்யோ கூடாது" என்று அலறினார் அம்மையார். கணவன் பக்கத்தில் இருக்கும்போது தாலி அணியக்கூடாது. கணவன் வெளியூர் போயிருக்கும் போதுதான் தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் முறை என்று சொன்னார். அதை உண்மை என்று நம்பி, நாகம்மையார் தாலியைக் கழற்றிக் கொடுத்தார். அதை வாங்கிச் கவரில் தொங்கும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். காலையில் நாகம்மையார் கண் விழிக்கும் முன்பு வெளியில் புறப்பட்டுச் சென்று விட்டார். அவர் மாட்டிக் கொண்ட சட்டையோடு தாலியும் வெளியே போய்விட்டது.

மறுநாள் நாகம்மையார் தாலி இல்லாமலே இருந்தார். இதைக் கண்ட மாமியார் "தாலி எங்கே?" என்று கேட்டார். இந்த நேரத்தில் பக்கத்துவிட்டுப் பெண்களும் கூடி விட்டார்கள். அப்போது நாகம்மையார், "கணவர் பக்கத்தில் இருக்கும் போது தாலி வேண்டியதில்லை. அவர் வெளியூருக்குப் போகும் போதுதான் கட்டிக் கொள்ள வேண்டும்" என்றார். கணவனுக்கு ஏற்ற பெண்டாட்டி என்று கூறி அந்தப் பெண்கள் சிரித்தார்கள் சின்னத் தாயம்மாள் சீற்றம் கொண்டாள்.

கல்வி அறிவில்லாத நாகம்மையார் நாளடைவில் பெரியாரை நன்கு புரிந்து கொண்டார். அவர் செய்வதெல்லாம். மூடத் தனத்தையும், தீமைகளையும். ஒழிக்கும் நல்ல பணி என்று அறிந்து கொண்டார். பெரியாரின் பொதுப்பணிகள் எல்லாவற்றிலும் துணையாக இருந்தார்.

எல்லா வகையிலும் பெரியார் இராமசாமியோடு ஒத்துழைத்தார் நாகம்மையார். ஆனால் ஒரே ஒரு வகையில்" மட்டும் கடைசி வரை மாறுபட்டவராகவே விளங்கினார். (வீட்டிற்கு

17