பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்


இராமசாமியைப் பொருத்த வரையில் குளிப்பதைப் போல் தொல்லையான வேலை வேறு கிடையாது. காசியில் குளிர் மிகுதி. அதிலும் ஐந்து ஆறு மணியைப் போல் கங்கையாற்றில் குளிப்பதென்றால் உடல் வெடவெடத்துப் போகாதா?

மடத்து சாமியார்கள் எழுவதற்கு முன்னால் இராமசாமி எழுந்துவிடுவார். குளிக்காமலே பட்டை பட்டையாக உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொள்வார். இந்த ஏற்பாட்டைச் செய்தவன் தலையில் இடி விழ வேண்டும், என்று நினைத்துக் கொண்டே உடல் நடுநடுங்க வில்வம் பறித்து வருவார். ஒருநாள் பெரிய சாமியார் பார்த்துவிட்டார். அவர் இவரைத் திட்ட இவர் அவரைத் திட்ட ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள, மற்ற சாமியார்கள் விலக்கி விட்டார்கள். பிறகு மடத்தை விட்டுத் துரத்தி விட்டார்கள்.

காசியில் கங்கைக்கரையில் பலர் சிரார்த்தம் இறந்தவர்களின் நினைவு நாள் சடங்கு செய்வார்கள், அப்போது அரிசி, பமும் முதலியவற்றை பிண்டமாகப் போடுவார்கள், அந்த பிண்டத்தை வாங்கி உண்பதற்காக பிச்சைக்காரர்கள் வருவார்கள். அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக முப்பது நாற்பது நாட்கள் சமாளித்தார் இராமசாமி.

காசி புண்ணியபூமி, அங்கு எல்லாம் உயர்வாக இருக்கும் என்று எண்ணியிருந்தார் இராமசாமி. ஆனால் இந்தியாவில் உள்ள மிக மோசமான நகரங்களில் ஒன்றாக அது இருந்தது. அந்த ஊரைவிட்டுப் புறப்பட முடிவு செய்தார்.

27