பதிப்புரை
உலகில் சமயங்கள் பல இருப்பினும், அவற்றின் செயல்படு முறைகளில் வேறுபாடுகள் காணப் படினும், கூர்ந்து நோக்கினால், மக்களை நல்வழிப் படுத்தி அவர்களை நல்வாழ்வு வாழ்ச் செய்யும் குறிக்கோள் உடையன வாகவே அவை அனைத்தும் காணப்படுகின்றன.
எனவேதான் பல சமயக் கருத்துகளையும் இளைஞர்கள் அறிந்திருத்தல் நன்மை பயக்கும் எனக் கருதி, அவ்வச் சமய நீதிகள் அடங்கிய கதைகளில் சிலவற்றைத் தொகுத்து, இங்ஙனம இளைஞர்கட்கேற்ற வகையில் வெளியிட விழைந்தோம்.
அதன் விளைவாகவே "கிறித்துமொழிக் கதைகள் அல்லது கிறித்து மொழி உவமைகள்" "இசுலாமியக் கதைகள்" ஆகிய இரு கதை நூல்களை வெளியிட்டனம்.
"இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்" என்னும் இந் நூல் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் இயற்றிக கழகவழி வெளியிடப் பெற்ற 'பௌத்தக் கதைகள்' என்னும அரிய நூலின் சுருக்கமாகும். இந் நூலினைச் சுருக்கித் தந்த திரு சு. அ. இராமசாமிப் புலவரவர்கட்குக் கழகத்தார் நன்றி உரித்தாகும்.
நீதிக் கதைகளை எல்லாரும் படித்துப் பயன் பெறும் வசையில் பொது நூலகங்களிலும் பள்ளி நூலகங்களிலும் இந்நூல் இடம்பெற வேண்டுவது மிகமிக இன்றியமையாததாகும்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்