பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52

ஸ்லாம்:அஸ்ஸலாமுஅலைக்கும் என் பதின் சுருங்கிய வடிவமே ஸ்லாம்' என்பதாகும். இது முஸ்லிம்கள் ஒரு வரையொருவர் சந்திக்கும்போது கூறிக் கொள்ளும் முகமன் வாழ்த்துரை யாகும். இதற்கு உங்கள் மீது இறை வனின் சாந்தி உண்டாவதாக என்பது பொருளாகும்.

ஆதம் (அலை) சொர்க்கப் பூங்கா வில் உலவி வரும்போது அங்கிருந்த வானவர்களை நோக்கி அஸ்ஸலாமு அலைக்கும் யா மலாயிகத் தல்லாஹ்' என்று கூறினார். அதற்கு வானவர்கள் 'வ அலைக்கு முஸ்ஸலாம் வ ரஹ்மத் துல்லாஹ்' என மறுமொழி கூறினர். இதையே அல்லாஹ் ஆதம் (அலை) வழியினர்ககு இறை நம்பிக்கையாளரின் முகமன் உரையாக ஆக்கினான். அன்று முதல் இன்றுவரை அவ்வாறே இறை நம்பிக்கையாளர்களிடையே ஸ்லாம் நிலைபெற்று வருகிறது.

நம்மை நோக்கி ஒருவர் "அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினால், அதற்கு மறுமொழியாக 'வ அலைக்கு முஸ் ஸ்லாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக் காத்துஹா' என்று பதில் ஸ்லாம் கூறு வது சிறப்பானதாகும். இதற்கு அல் லாஹ்வின் சாந்தியும் அவனது அருட் பேரும் நற்பாக்கியங்களும் உண்டாவ தாக’ என்பது பொருளாகும்.

ஸ்லாம் கூறுவதில் முந்திக் கொள் வதும், உரக்கக் கூறுவதும் சிறப்புடைய தாகும். தொழுகையின் இறுதியில் தோள் பக்கமாக இருபுறமும் திரும்பி ஸ்லாம் கூறுவதன் மூலம் வானவர் களுக்கு ஸ்லாம் கூறப்படுகிறது. இறந்த வர்களுக்கு ஸ்லாம் கூறுவது கடமை யாகும். ஸ்லாம் கூறும்போது தலை யைத் தாழ்த்தவோ அன்றி கைகளை உயர்த்தவோ கூடாது.

ஷாமு ஷிஹாபுத்தீன் (வலி)

தியாகம் செய்த சொல்லாக

ஷஹீது: உயிர்த்

தியாகியைக் குறிக்கும் "ஷஹீது' எனும் சொல் அமைந்துள்ளது. இறை வழியில் அறப்போர் செய்து உயிர்த்தியாகம் செய்பவர்கள் இப் பெயரால் அழைத்துப் போற்றப்படு வர். இறைவழியில் உயிரிழந்தவர்கள் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெறுபவர் களாக உள்ளனர் என்பது ஆன்றோர் வாக்காகும்.

ஷாமு ஷிஹாபுத்தீன் (வலி): இஸ்லா மியச் சட்ட அடிப்படையில் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பாக்களாக வடித்துத் தந்தவர் ஷாமு ஷிஹாபுத் தீன் (வலி). இவர் 1044ஆம் ஆண்டு ஹிஜ்ரி காயல்பட்டனத்தில் பிறந்தார். இவர் காயல்பட்டனம் சுலைமான்(வலி) அவர்களின் மூன்றாவது மகனாவார்.

இஸ்லாமிய மக்களில் ஒரு சிலர் இறைச் சட்டங்களைச் சரிவர உணரா தவர்களாக நெறிபிறழ்ந்து வாழ முற் பட்டனர். அத்தகையவர்கட்கு இறை நெறி புகட்டி, இறைச் சட்டங்களை நினைவூட்டி, அவர்களை ஷரீயத் வழி யில் திருப்பக் கவிதையைக் கையாண்டு

வெற்றி பெற்றவர் ஷாமு ஷிஹா புத்தீன். இவர் இப்பணியை மேற்

கொள்ள கனவு மூலம் இறைக்கட்டளை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாத்தின் பெயரால் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களிடையே வந்து புகுந்த பல்வேறு தவறான வழிமுறைகளை, மூடப் பழக்க வழக்கங்களை, அனாச் சாரங்களைக்கடுமையாகச் சாடி பாடல் கள் புனைந்தார். இவர் பாடல்கள் எ வளி ைம ய க வு ம் இனிமையாகவும் அமைந்துள்ளன. இஸ்லாமிய மார்க்க ஞானத்தை ஊட்டவல்லன. மார்க்க ச் சட்டதிட்டங்களைத் தெளிவாகச் சுட் டிக் காட்டி வழிதிருப்புவன.