பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 111 ក្ញុំ tartai (stratosphere) ഖങ് மண்டிலத்திற்கு மேல் கிட்டத்தட்ட 30 கி. மீட்டர் உயரத்திற்குப் பரவியுள்ள பகுதியாகும் இது. மூவண்ணக் குழல் Tricolor tube) : தொலைக் காட்சிப் பெட்டியில் (ஏற்கும் கருவியில்) உள்ள ஒருவித மின் குழல் இது , வண்ணக்காட்சிப் படங்களை ஏற்கத் துணை செய்வது. வாகன அலைகள் (Carrier waves): ஒலியைப் ப்ர்ப்பும் கருவியினின்றும் சதா வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அலை களாகும் இவை. தொலைக் காட்சி வாகன அலைகளும் இவை போன்றவையே. ஆனல் அவற்றின் அதிர்வு - எண் மிக உயர்ந்தது. இவற்றின்மீதுதான் பட அலைகள் இவர்ந்து செல்லுகின்றன. s.* வானி (Ether): வான வெளியில் நிறைந்திருக்கும் கண்காணு ஒரு பொருள்; இதைத் தொட்டு உணர் முடியாது; இது யாவற்றையும் ஊடுருவிச் செல்ல வல்லது. நுண்ணி தினும் நுண்ணியபொருள். வானெலியின் வாகனம், ஒளியின் வாகனமும் இதுவே. தொலைக் காட்சியும் இதன்மீதே இவர்ந்து செல்லுகின்றது. வானுெலி (Radio) : தொலை விடங்களில் நடைபெறும் சொற்பொழிவு, இசைவிருந்து முதலியவற்றை எங்கும் உள்ளார் செவிமடுக்கச் செய்யும் ஓர் அற்புதச் சாதனம். வானுெலி அலைகள் (Radio waves): மின் கடத்தியில் - அலைகளை உண்டாக்கும் கருவியில் முன் பின்னகத் திசை மாறித் துரிதமாக ஓடி வரும் மின்னணுக்கள் வெறும் வெட்ட வெளியில் பரவச்செய்யும் அலைகளே இவை. ஓரிடத்திலிருந்து அனுப்பிப்பெறும் இவை ஒரு குறிப்பிட்ட அலை நீளத்தை யுடையனவாக இருக்கும்.