பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உராய்வு

91

டத்தில் பல இடங்களில் இத்தகைய ஊற்றுக்கள் உள்ளன.

இதே வகையான ஊற்றுக்களில் வெந்நீர் ஊற்றுக்களும் உள்ளன. இவையும் பூமித் துளையின் மூலம் வெளியே வெந்நீரைப் பீய்ச்சியடிக்கும். இவ்வெப்ப நீரோடு நீராவியும் கலந்திருக்கும். இத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் எரிமலைப் பகுதிகளிலேயே அதிகமாக உள்ளன. நியூசிலாந்து, ஐஸ்லாந்திலுள்ள வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் புகழ் பெற்றவைகளாகும். அமெரிக்காவில் எல்லோஸ்டோன் எனுமிடத்தில் உள்ள வெந்நீர் ஊற்று புகழ் பெற்ற மற்றொரு ஊற்றாகும். இதில் வெந்நீர் தொடர்ந்து வெளியே பீறிட்டு வருவதில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெந்நீர் பீறிட்டு வெளியே வரும். இவ்வூற்று 'பழைய நம்பிக்கை' (Old faithful) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பூமியின் அடி மட்டத்தில் உள்ள நெருப்புக் குழம்பே வெந்நீர் ஊற்றுக்குக் காரணமாகும்.

அழகுக்காக செயற்கை ஊற்றுக்கள் (Fountains)) அணைக்கட்டுகளை ஒட்டிய பூந்தோட்டப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுவதுண்டு. இதற்கு சாத்தனூர், வைகை கண்ணம்பாடி அணை போன்ற அணைக்கட்டுப் பகுதிகளில் அமைந்துள்ள செயற்கை ஊற்றுக்களைச் சான்றாகக் கூறலாம். உயரமான தொட்டிகளில் தேக்கி வைக்கும் நீரை குழாய் மூலம் தாழ்வான பகுதிகளுக்கு நீர் அழுத்தம் மூலம் பீறிட்டு எழச் செய்வதுண்டு. இத்தகைய செயற்கை ஊற்றுக்கள் அழகுடன் அமைக்கப்படும்.

உராய்வு : இதை ஆங்கிலத்தில் பிரிக்ஷன் (Friction) என்று கூறுவர். ஒரு பொருளை மற்றொரு பொருள்மீது வைத்து நகர்த்தும் போது இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்வே உராய்வு ஆகும். வழவழப்பான பரப்பையுடைய ஒரு பொருள் மீது மற்றொரு வழவழப்பான பரப்புடைய பொருளை வைத்து இழுத்தால் வைத்த பொருள் எளிதாக நகரும். இஃது குறைவான உராய்வால் ஏற்படுவதாகும். சொரசொரப்பான பொருள் மீது சொரசொரப்பான மற்றொரு பொருளை வைத்து இழுத்தால் பொருள் நகருவது சற்று கடினமாகும். இங்கு உராய்வு அதிகமாக இருக்கும்.

ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் உராய்வதால் அப் பொருள் நகருவதற்குள்ள தடைதான் 'உராய்வு ஆற்றல்’ என அழைக்கப்படுகிறது.

நாம் சாதாரணமாக இரு கைகளை அழுத்தித் தேய்த்தால் வெப்பம் உருவாவதை உணரலாம். உராய்வு அதிகமிருந்தால் வெப்பமும் அதிகமாக இருக்கும். உராய்வுக் குறைவாக இருப்பின் வெப்பமும் குறைவாக இருக்கும்.

உராய்வு ஆற்றலைப் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டறியப்பட்ட புதிய சாதனங்கள் உராய்வுமிக்க போக்குவரத்துக் கருவிகளைக் கண்டறியும் கண்டுபிடிப்புகளாக அமைந்தன. சொரசொரப்புத் தரையில் பொருளை இழுப்பதால் மிகுதியாக உராய்வுத் தன்மை ஏற்பட, பளுவான பொருளை இழுப்பது கடினமாக இருந்தது. இதனால் பொருளை உருளைகள் மீது வைத்து இழுத்தபோது எளிதாக இருந்தது. மேலும், ஆராய்ந்து அதே பொருளை இரு சக்கரம் பொருத்திய வண்டியில் வைத்து இழுத்தபோது மேலும் எளிதாகியது. மேலும் ஆராய்ச்சி செய்து ரப்பர் வளையமிட்ட சக்கர வண்டியின் மீது பொருளை வைத்து இழுத்தபோது மிக மிக எளிதாக இருந்தது. இவ்வாறு உராய்வை எளிமைப்படுத்த கண்டுபிடித்த சாதனங்கள் போக்குவரத்துக்கான வசதிகளாக அமைந்தன.

பொருள்கள் ஒன்றோடொன்று உராயும் போது உராய்வு ஆற்றலின் தன்மைக்கேற்ப வெப்பமுண்டாவது இயல்பு என முன்பே கண்டோம். இன்று எந்திரங்கள் இயங்கும்போது எந்திரத்தில் பொருத்தப்பட்ட பல்வேறு வகையான சக்கரங்கள் சுழலும்போது வெப்பமுண்டாவது தவிர்க்க முடியாததாகும்.

நாளடைவில் உராயும் பொருட்களும் தேய்மானத்திற்கு ஆளாகின்றன. எனவே, இயங்கும் எந்திரம் கடுமையான தேய்மானத்திற்கு உட்படாமல் இருக்க அவற்றிற்கிடையேயான உராய்வை முடிந்த அளவு குறைக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ளார்கள்.

இதற்கு முதற்படியாக உராய்வை ஏற்படுத்தும் பொருள்களின் உராய்வுப் பகுதிகள் வழவழப்பாக்கப்படுகின்றன. மேலும், அவை உராயும்போது உராய்வுப் பகுதியில் எண்ணெய் அல்லது மெழுகைப் பூசி, உராயாது வழுக்கிச் செல்ல வகையேற்படுத்தப்படுகின்றது. தையல் மிஷின் முதலான எந்திரச்