பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெஞ்சமின் ஃபிராங்ளின்

223

துருவங்களுக்கு இடையே சமதூரத்தில் கிடையாக அமைந்துள்ள கோடு பூமத்திய ரேகையாகும்.

வானில் 35,000கி.மீ. தூரத்திலிருந்து காணப்பட்ட பூமிப்பந்தின் தோற்றம்

பூமத்திய ரேகைக்கு இணையாக பூமியைச் சுற்றிலும் செல்வதாக அமைக்கப்பட்டுள்ள கோடுகள் 'அட்ச ரேகை' எனப்படும். தென் துருவத்துக்கும் வடதுருவத்துக்கும் இடையேயுள்ள தூரம் 90 சம பாகங்களாகப் பகுக்கப்பட்டு கோடிடப்பட்டுள்ளது. இடத்தையும் நேரத்தையும் கணிக்க வட்டக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இஃது 'தீர்க்க ரேகை' எனப்படுகிறது. கிழக்குப் பகுதியில் உள்ள இக்கோடுகள் 'கிழக்குத் தீர்க்கரேகை' எனவும் மேற்குப் பகுதிக்கோடுகள் மேற்கு தீர்க்கரேகை எனவும் அழைக்கப்படுகிறது.


பெஞ்சமின் ஃபிராங்க்ளின் : புகழ்பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞரும் புத்தமைப்பாளரும் எழுத்தாளருமாவார். இவர் பாஸ்ட்டன் நகரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இரண்டாண்டுகள் மட்டுமே பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். பின்னர், தந்தையின் மெழுகுவர்த்திக் கடையில் சிலகாலம் பணியாற்றினார். அவ்வேலை பிடிக்காமல் தன் அண்ணனின் அச்சகத்தில் பணிபுரிந்தார். அப்போது அச்சுத் தொழிலை நன்கு கற்றுத் தேறினார். அப்போது அவருக்குப் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் ஏற்பட்டது தானாக முயன்று கணிதம், தர்க்கவியல், இயற்கணிதம், வடிவ கணிதம் போன்றவற்றைக் கற்றுத் தேறினார்:

அறிவுக்கூர்மை மிக்கவரான இவர், பத்திரிகைக்கு எழுதும் வழக்கத்தை மேற்கொண்டார். இஃது அவர் அண்ணனுக்குப் பிடிக்காமற் போகவே தம் 17ஆம் வயதில் இவர் பிலடெல்பியாவுக்குச் சென்று மீண்டும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டார். இங்கிலாந்து சென்று அச்சுத் தொழிலில் மேலும் நுட்பங்களைக் கற்றுணர்ந்து, பிலடெல்பியா திரும்பி பென்சில்வேனியா கெசட் எனும் பத்திரிகையை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதிய இவர் முதன்முறையாக நடமாடும் நூலகத்தை