பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

மின்னாக்கிகள்

மேகத்திற்கும் மேகத்திற்கும் இடையே உண்டாகும் மின்னலால் எவ்விதத் தீங்கும் இல்லை. அதன் மின்னாற்றல் பூமியை எட்டாதவாறு காற்றுத் தடுத்துவிடுகிறது. ஆனால், மழை மேகத்திற்கும் பூமிக்குமிடையே ஏற்படும் மின்னல் பெருந்தீங்கு இழைக்கக் கூடியதாகும். மின்னலால் உண்டாகும் மின்சக்தி முழு வீச்சில் பூமியைத் தாக்குகிறது. இதனால் மரங்கள் கருகிவிடுகின்றன; கால்நடைகளும் மனிதர்களும் உயிரிழக்கிறார்கள். கட்டிடங்கள் இடிந்து நொறுங்குகின்றன. இதுவே 'இடி’ என அழைக்கப்படுகிறது.

இடியின் கொடுந்தாக்குதலிலிருந்து தப்ப இடி தாங்கிக் கம்பிகளை அமைக்கிறோம். இடி தாங்கிக் கம்பிகள் இரும்பாலும் செப்புப்பட்டையாலும் அமைக்கப்படுவதால் எளிதாக மின்னல் தரும் மின்சார ஆற்றலை கட்டிடம் வழியே கடத்தாமல் எளிதாகப் பூமிக்குள் கடத்திவிடும். இவை கட்டிடத்தில் உச்சிப் பகுதிக்கும் சற்று மேலாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். அதன் அடிப்பகுதி பூமிக்குள் இருக்குமாறு அமைக்கவேண்டும்.

மின்னல் பல்வேறு வகையான தோற்றங்களில் வெளிப்படும்.


மின்னாக்கிகள் : 'எலெக்ட்ரிக் ஜெனரேட்டர்' என அழைக்கப்படும் மின்னாக்கிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகும்.

எளிய மின்னாக்கி அமைப்பு

ஒரு கம்பிச் சுருள் வழியாகக் காந்தத்தை விரைவாகச் செலுத்தினால் அக்கம்பிச் சுருளில் மின்னோட்டம் உண்டாகும். இந்த அடிப்படையில் இயங்கும் எந்திரமே 'மின்னாக்கி' எந்திரம். தொடக்கத்தில் நிலக்கரியை எரிப்பதன்மூலம் கிடைக்கும் வெப்பச் சக்தியைக் கொண்டு மின்னாக்கி எந்திரங்களை இயங்கச் செய்து மின் உற்பத்தி செய்தார்கள். இஃது அனல் மின் உற்பத்தி முறையாகும். பின்னர், விரைவாக ஓடிவரும் நீரின் விசையைக் கொண்டு மின்னாக்கி எந்திர சக்கரங்களைச் சுழலச் செய்து மின் உற்பத்தி செய்தார்கள். இவ்வகையில் உண்டாக்கப்படும் மின்சக்தி 'புனல் மின்சாரம்’ அல்லது 'நீர் மின்சாரம்’ என அழைக்கப்பட்டது. தற்காலத்தில் அணுசக்தியைக் கொண்டு இத்தகைய மின்னாக்க எந்திரங்களை இயக்கி மின்விசை தயாரிக்கப்படுகிறது, இஃது 'அணுவின் விசை’ என அழைக்கப்படுகிறது.

சிறிய அளவில் மின்சக்தி உற்பத்தி செய்ய சிறிய மின்னாக்கிகளை இயக்கி மின்சக்தி பெறுவதுண்டு. சான்றாக, சைக்கிளில் உள்ள விளக்கை எரியச் செய்ய 'டைனமோ' எனும் சின்னஞ்சிறு மின்னாக்கி எந்திரம் சைக்கிளின் டையரோடு இணைக்கபட்டிருக்கும். சைக்கிள் ஓடும்போது டயரோடு இணைத்துள்ள டைனமோ மின்னாக்கி எந்திரமும் விரைந்து சுழலும். அப்போது உற்பத்தியாகும் சிறிதளவு மின்சாரம் கம்பி மூலம் சென்று சைக்கிளின் முகப்பில்