பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேகம்

253

பட்ட மேகங்களாக அமைகின்றன. உயரம் தட்டவெப்ப நிலையைப் பொறுத்தும் அங்குள்ள தூசித் துகள்களைப் பொறுத்தும் மேகங்கள் உருவாகின்றன.

மிக உயரத்தில் உருவாகும் மேகங்கள் 'நொக்ட்டிலுசன்ட்' (Noctilucent) என்று அழைக்கப்படுகின்றன. இவை 50 அல்லது 80 கி.மீ. உயரத்தில் இருக்கும். இதற்கு அடுத்த நிலையில் உள்ள மேகம் 'நக்ரியாஸ்’ (Nacreous) அல்லது 'தாய் முத்து' என்று கூறப்படுகிறது. இவை 15 அல்லது 20 கி.மீ. உயரத்திலுள்ள மேகமாகும். இம் மேகம் மெல்லியதாக இருக்கும். துாசித் துகள்களாலும் நீர்த் திவலைகளாலும் அழகிய வண்ணத் தோற்றமுடையதாகத் தோன்றும். இம்மேகம் சூரியன் மறைந்த பிறகோ, இரவிலோ அல்லது சூரியன் உதிப்பதற்கு முன்போ காணப்படும்.

இதற்கு அடுத்தபடியாக உள்ள மேகம் பூமியிலிருந்து எட்டு அல்லது பத்து கி.மீ. உயரத்தில் காணப்படுவதாகும். இம்மேகங்கள் 'சிர்ரல்’ என்றும், 'சிக்ரோஸ்ட்ரேட்டஸ்’ மேகம் என்றும் 'சிர்ரோகுமுலுஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இம் மூன்று வகை மேகத்தில் முதல் வகை இறகுபோல் மென்மைத் தன்மையுடையதாகும். இரண்டாம் வகை மெலிதான வெள்ளத் தட்டுப் போல் இருக்கும். மூன்றாவது மேகம் உருண்டை வடிவினவாக ஆகாயத்தில் தோற்றமளிக்கும்.

கீழ்மட்ட மேகம் சிறிய நீர்த்துளிகளால் உருவானதாகும் இதற்கு மேல் தரையிலிருந்து 4 கி.மீ. உயரத்தில் உள்ள மேகம் பெரும் உருள் வடிவினவாகக் காணப்படும். அனைத்துக்கும் கீழாக, தரையிலிருந்து ஒரு கி.மீ. உள்ள மேகம் அலைகளைப் போல அமைந்திருக்கும். இதே அளவு உயரத்தில்தான் மழை மேகங்களும் உள்ளன . இதற்குக் குறிப்பிட்ட