பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

ஆஸ்துமா

இது கடினத்தன்மை மிக்கதாகும். ஆனால் எளிதில் உடையும் இயல்பு உடையதாகும்.

வெள்ளியம், காரீயம் ஆகியவற்றுடன் ஆன்டிமனியைச் சேர்த்து உலோகக் கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. அச்சு உலோகத் தயாரிப்பில் ஆன்டிமனி மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்டிமனி வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துவதில்லை. உலர் காற்றில் இதன் நிறம் மாறாவிடினும் ஈரமான காற்றில் இது மெதுவாக ஆக்சைடாக மாறத் தொடங்குகிறது.

ஆன்டிமனியை காரீயத்துடன் 8 முதல் 12 சதவிகிதம் கலந்தால் காரீயத்தின் கடினத்தன்மை அதிகரிக்கும். அமில அரிப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் மிகும். இக்கலவை ஊர்திகளில் பயன்படுத்தப்படும் மின்கலப் பெட்டிகளின் பகுதிகள் செய்யப் பயன்படுகிறது, உலகில் கிடைக்கும் ஆன்டிமனியில் பாதிக்குமேல் இத்தகைய காரியங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. மின்கலப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் ஆன்டிமனியை மீண்டும் மீண்டும் உருக்கிப் பயன்படுத்தலாம்.

காரீயத்துடன் 11, 25% ஆன்டிமனியும் 9. 137%வெள்ளீயமும் கலந்து உருவாக்கப்படும் அச்சு எழுத்துக்கள் உறுதியாக இருக்கும். இக்கலவை உருகிய நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாறும்போது சிறிது விரிவடையும். அப்போது உருக்குக் குழியிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் அடைத்துக் கொள்ளும். குளிர்ந்தபின் அச்செழுத்துக்கள் ஒழுங்கமைதியோடு கூடிய அழகிய வடிவைப் பெறும். எனவே, நேர்த்தியான உறுதியான அச்சு எழுத்து வார்ப்புக்கு ஆன்டிமனி விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

ஆன்டிமனி கலக்கும்போது உறுதித்தன்மை மிகுவதால் ஊர்திகளிலும் நீர் இறைக்கும் பம்புகளிலும் உராய்வுக் குறைப்புக்கான உருளைகள் ஆன்டிமனி, செம்பு, வெள்ளியம் கலந்த கலவைகளால் உருவாக்கப்படுகின்றன.

விலை குறைந்த ஆடம்பர அணிகலன்கள் ஆன்டிமனியும் வெள்ளியமும் கலந்த வெண் உலோகத்தால் (White metal) செய்யப்படுகிறது.

ஆஸ்டன், ஃபிரான்சிஸ் வில்லியம் : இவர் இங்கிலாந்து நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானியாவார். 1877ஆம் ஆண்டில் பெர்மிங்ஹாம் எனுமிடத்தில் பிறந்தவர். பொருள்களில் அடங்கியுள்ள அணுக்களின் எடையை அவற்றின் நிறைகளுக்கேற்பக் கணக்கிடப் பயன்படும் ‘நிறைநிரல் வரைவி' (Mass spectrograph) யை முதன்முதலாகக் கண்டு பிடித்தவர் இவரே. அத்துடன் 'ஐசோடோப்' என அழைக்கப்படும் ஓரகத் தனிமங்களையும் இவரே கண்டறிந்தார். இவை இரண்டையும் கண்டுபிடித்தமைக்காக 1922ஆம் ஆண்டில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

ஃபிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்

இவர் கண்டுபிடித்த நிறைநிரல் வரைவி வேதியியலில் மட்டுமல்லாது அணுக்கரு இயற்பியல், உயிரியல், நிலஇயல்போன்ற பல்வேறு துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை கண்டறியப்பட்டுள்ள 287 இயற்கை ஓரகத் தனிமங்களில் 212-ஐக் கண்டு பிடித்து விளக்கியவர் ஆஸ்டன் ஆவார்.

ஆஸ்துமா : ஒரு வகை மூச்சுத் திணறல் உபாதை 'ஆஸ்துமா' என அழைக்கப்படுகிறது. இதை நோய் என்பதைவிட 'மூச்சுத் தடை’ என்றே கூறலாம்.

ஆஸ்துமாவை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். மூச்சுக்குழலில் ஏற்படும் தசை இறுக்கத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அது மூச்சுக்குழல் ஆஸ்துமா (Bronchial Asthma) என்று அழைக்கப்படும். இருதயத்தின் இடப்பாகம் தளர்வுற்ற நிலையில் நுரையீரலில் நீரும் குருதியும் பின்னிய நிலையில், மூச்