பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

டிருந்தனர். சிறுவர் எங்களை நோக்கி, “@errá®! (Blackie) பிளாக்கி' என்று உரக்கக் கூவிக் கைகொட்டிச் சிரித்த னர். எனக்கு அவர்கள் செய்கை யொன்றும் விளங்க வில்லை. சிற்றப்பாவுத் திரும்பிப் பார்த்துவிட்டுப் புன்சிரிப் புடன், நாம் கருப்பர்களாம். அம்மா! வெள்ளையர்களாகிய அவர்கள் வாழு மிடத்துக்கு நாம் வந்து நடமாடுவது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. இந்தியர்களைக் கண்டால் அவர்கள் இவ்வாறுதான் கேலி செய்வது வழக் கம் என்று கூறினர். நான் வியப்போடு நடந்தேன்.

நான் கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலையில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. சிறிய தந்தை என்னைவிட்டுச் சென்ற இரண்டு நாட்களுக் கப்புறம், ஜான் கில்பர்ட் ஹாஸ்டலில் என்ன வந்து பார்த்தான். கப்பல் எறிய்போது சந்தித்ததற். கப்புறம் என்னைப் பார்க்க முடியாமல் போனதற்கு அவன் ஏதேதோ காரணங்களெல்லாம். கூறினன். ஐந்தாறு மாக காலம் இந்நகரிலேயே இருக்கவேண்டி நேருமென்றும், ஆதலால் அடிக்கடி என்னே வந்து பர்ர்ப்பதாகவும் கூறி ன்ை. முதல் நாள் தான் இந்த பீடிகையெல்லாம். அப்புறம் அவன் நினைத்தபோதெல்லாம் வருவதும், என்னேப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வது மானன். நான் அவ: ைேடு பழைமை போலவே பழக ஆரம்பித்தேன்.

ஒரு நாள் சனிக்கிழமை இரவு எட்டு மணி யிருக்கும்! சனிக்கிழமைகளில் தொழிலாளர் முதல் அனைவரும் பலவித ம்ான கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும் இரவு முழு வ்தையுங் கழிப்பது வழக்கம். ஆகவே, மக்கள் ஆண்களும் பெண்களும், அணியணியாக நேடனசாலை, நாடக சாலை முதலிய இடங்களக்குச் சென்றுகொண்டிருந்தனர். இராக் கள்லங்களில் லண்டன்மா நகரம் ஒப்பற்ற அழகுடன்