பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

யாரோ நகைக்குஞ் சப்தங் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். பின் வரிசையிலிருந்த ஒரு வாலிபர்'தம் கண் பருக்கு எங்கள் நிலைமையைச் சுட்டிக்காட்டி எதோ கூறிக் கொண்டிருந்தார். இதைக் கண்டதும் நான் நாணத்தால் தலே கவிழ்ந்தேன். -

அதற்கப்புறம் எனக்கு அங்கு இருக்கை கொள்ள வில்லை. ஷேக்ஸ்பியர் நாடகங்களை ராஜதான்ரி கலாசாலையிலும் மியூஸியம் தியேட்டர் முதலிய நாடகக் கொட்டகைகளிலும் கலாசாலே மாணவர்களும் ԼՁற்றும் நடிகர்களும் நடித்திருப் பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், இப் போது இந்த லண்டன் தியேட்டரில் நடிக்கப் பெற்ற பமாக்பெத்’ நாடகத்தின் மேன்மையை எவ்வாறு புகழ்ந் துரைப்பேன் அதில் நடித்த நடிகர்களின் நடிப்புத் திறமை யைப் போல், அதன் பின்னரும் இன்றுவரைக் கண்டதில்லை. நடிகர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எடுத்துள்ள பாத் திரங்களாகவே ஆகிவிடுகின்றன. அதில் தான் ஜீவநாடி யிருக்கிறது. நாடகம் இவ்வளவு சிறப்புடையதாயிருந்தும் கான் அமைதியா யிருந்து, பார்ப்பதற்கில்லாமற் போயிற்று. ஜான் கில்பர்ட் அறிவில்லாமல் செய்த குரங்கு சேஷட்ை யால், பிறர் எங்களைக் கண்டு நகைக்க நேர்ந்த பிறகு நான் அங்கு எப்படி அமைதியாக இருந்து நாடகத்தைப் பார்க்க முடியும்? அனலின்மீது உட்கார்ந்திருப்பதுபோல் சங்கடப் பட்டேன். மனவேதனை காங்க முடியவில்லை. நாடகத்தி னிடையே எழுந்து வெளியே போவதுஞ் சாத்தியமில்லை:

ஜானே பின்னிருந்தவர்களின் ஏளனச் சிரிப்பை யுணர்ந்த தாகவே தெரியவில்லை. என் தோளின் மீது அமர்ந்து விஷமஞ் செய்துகொண்டிருந்த கைகளை நான்