உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் என்றால் என்ன பூதமா? பேயா?

199

வாலிபர். எனவே, நன்றியறிதலும், மகிழ்ச்சியில் தாங்க மாட்டாமல், “மிஸ்டர் சத்திநாத! எங்களை விபத்தினின்றுங் காப்பாற்றியதற்காக மிகவும் வந்தனம்” என்று கூறிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினேன். அப்போதே வண்டியிலிருப்பவர்களைக் கவனித்த சத்தியநாதர் என்னை நோக்கி, “ஆ புவனா! உங்கள் வண்டியா இது! எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறதே…”என்று வியப்போடு கூறினார்.

பின்னர் அவர், தாம் பொழுது போக்கிற்காக, பார்க்குக்கு வந்ததாகவும், தூரத்தில் குதிரை பண்ணும் இடக்கைப் பார்த்து விட்டு, ஓடி வந்ததாகவுஞ் சொன்னார். “கடவுள்தான் உங்களை இந்நேரத்தில் இங்கு கொண்டு வந்து விட்டார்” என்று நான் ஆறுதலாகக் கூறிக் கொண்டேன். அவர் என்னுடைய நன்றியறிதலான வார்த்தையை அவ்வளவாகப் பாராட்டாது, இரண்டொரு வார்த்தை கூறி விட்டு, விடை பெற்றுச் சென்றார். நான் வண்டியிலேறியதும், குதிரை பழையபடி ஒழுங்காக ஓடியது.



பன்னிரண்டாவது அதிகாரம்


காதல் என்றால் என்ன ! பூதமா? பேயா?

த்தகைய பெருந்தன்மையான குணம் வாய்ந்த சத்தியநாதரை, நான் லண்டன் வந்த ஒரு வாரத்துக்கெல்லாங் கண்டேன். அது என் சிற்றப்பா என்னைக் கலாசாலையில் சேர்த்து விட்டுச் சென்ற சமயம். அவரும் மேற்படிப்புக்காக லண்டனுக்கு வந்ததாகத் தெரிந்தது. அவர் தெரு-