பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

கட்டளைக் கிணங்க அலி (ரலி) அவர்களும் அந்த யூதரிடம் சென்று மன்னிப்புக் கோரி மீண்டார். (ஆதாரம்: நிகாதே ஸர்மதி பக். 46)

இவ்வாறு பிற சமயத்தவர்களிடம் நேரடியாகவோ மறை முகமாகவோ அவர்கள் மனம் புண்படும்படி அல்லது வருந்தும்படி நடந்து கொள்ள முயலக் கூடாது என்பதை அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களும் அவர்கள் போதித்த சத்திய மார்க்கமான இஸ்லாமும் உத்தமமான உயர் பண்பை இன்னும் போதித்து வருவதை அறிய உள்ளம் இரும்பூதெய்துகிறது.

இஸ்லாமிய ஆட்சியில் பிற சமயத்தவர்

பரந்த அரபுப் பகுதி பெருமானாரின் தலைமையின் கீழ் வந்த பின்னரும் இதே அடிப்படையிலேயே இஸ்லாமிய ஆட்சியும் சமுதாயப் போக்கும் வலுவுடன் அமைவ தாயிற்று என்பதை இன்றும் இஸ்லாமிய வரலாறு உணர்த்திக் கொண்டுள்ளது.

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் காலத்திலும் அவருக்குப் பிறகும் இஸ்லாமிய ஆட்சி வெகு வேகமாகப் பரவியது. அண்ணலாரின் மறைவுக்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய ஆட்சி ஆசியா, ஐரோப்பா, ஆஃப்ரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் பரந்து விரிந்து நிலைபெற்றது. இஸ்லாமிய ஆட்சி விரிவாக்கத்தின்போது மக்களிடையே பெரும் எதிர்ப்போ கலகமோ இல்லை என்பது வியப்பளிக்கும் செய்தியாகும். இதைப்பற்றி பெல்ஜியப் பேராசிரியர் லாமென்ஸ் கூறும்போது, “அபூபக்ரின் படை சிரியாவை ஆக்கிரமித்தபோது மக்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் ஏற்படவில்லை. எதிர்ப்பில்லா வெற்றியாகவே அமைந்தது. அது மட்டுமல்ல, அபூபக்ரும் அவரது படையினரும் நாட்டின்மீது படையெடுத்து