பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

வழிபாடும் பரவலாயிற்று. இதுதான் இந்தியாவில் உருவ வழிபாடு தோன்றிய வரலாறு என சில வரலாற்றாசிரியர்கள் ஆராய்து கூறியுள்ளனர்.

கிருஸ்தவ சமயமும் உருவ வழிபாடும்

யூத சமயம் இறைவனுக்கு உருவம் அமைப்பது அறவே கூடாது எனக் கூறியது. உருவ வழிபாட்டுப் பழக்கமுள்ள கிரேக்கர்கள் யூத சமயத்தில் புதிதாக இணைத்தாலும் மற்ற யூதர்கள் அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாது எண்ணெயும் தண்ணீரும் போலவே பட்டும் படாமலும் வைத்திருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் கிரேக்க யூதர்களை மற்ற யூதர்கள் ஒருவகையில் வெறுத்து வந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கிருஸ்தவ சமயம் தோன்றிய பின்னர் கிரேக்கர்கள் பெருமளவில் கிருஸ்தவத்தில் இணைந்தனர். கிரேக்க யூதர்களும் கிருஸ்தவத்தில் சேர்ந்தனர். புதிய கிரேக்க கிருஸ்தவர் தங்கள் கிரேக்கப் பண்பாட்டிற்கொப்ப கிருஸ்த சமயத்திலும் உருவ வழிபாட்டை நுழைக்கலாயினர். தங்கள் முன்னோர்களை சிலை வடிவில் வணங்கி வந்த கிரேக்கர்கள் கிருஸ்தவத்தில் இணைந்த பிறகு இயேசு கிருஸ்துவுக்கும் அவர் தாயார் மரியத்திற்கும் சிலை வடித்து வணங்கத் தொடங்கினர். புதிதாகத் தங்கள் சமயத்திற்கு வந்து இயேசுவையும் மரியாவையும் சிலை வடிவில் வணங்கிக் கெளரவிப்பதாகக் கருதிய பாதிரிகளும் வாளாவிருந்து விட்டனர். இதனால் காலப்போக்கில் கிருஸ்தவ சிலை வணக்கமுறை அழுத்தமடையலாயிற்று. கி.பி.3ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் மன்னர் சர்ச்சுகளில் சிலை வணக்க முறையை ஆதரித்து ஆணை பிறப்பித்தார். கி.பி 754இல் 3வது லியோ மன்னன் சிலை வணக்க முறையை கடுமையாகத் தடை செய்தார். கி.பி 787இல் 6வது கான்ஸ்டன்டைனின் தாயாரான கிரேக்க,